நாட்டாமை அளவுக்கு சூரியவம்சம் படம் worth- ஆனு கேட்டாங்க!

சென்னை: இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூரியவம்சம் திரைப்படம் all-time பிளாக்பஸ்டர் படமாக இன்றுவரை உள்ளது

சரத்குமார்,ராதிகா,தேவயானி,நிழல்கள் ரவி என பலர் நடித்திருந்த இந்த படம் மக்கள் கொண்டாடிய மிகச் சிறந்த திரைப்படமாக இன்றுவரை உள்ளது

இந்நிலையில் நாட்டாமை படத்துடன் சூரிய வம்சம் படத்தை ஒப்பிட்டு ரிலீஸின் போது worth-ஆ என்று கேட்கப்பட்டதாக விக்ரமன் பகிர்ந்துள்ளார்.

சரத்குமார் இரட்டை வேடத்தில்

சரத்குமார் இரட்டை வேடத்தில்

தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட மிகச் சிறந்த இயக்குனராக வலம் வந்து கொண்டுள்ளவர் இயக்குனர் விக்ரமன். விக்ரமன் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய படங்களாகவே இருந்தன. அதில் மிக முக்கியமான திரைப்படம் சூரியவம்சம். சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் சரத்குமார் நடித்து இருப்பார். அப்பா சரத்குமாருக்கு ஜோடியாக ராதிகாவும் மகன் சரத்குமாருக்கு ஜோடியாக தேவயானியும் நடித்திருப்பார்கள்.

நாட்டாமை லெவலுக்கு இருக்குமா

நாட்டாமை லெவலுக்கு இருக்குமா

சாதாரண குடும்பத்தில் நடக்கும் அப்பா மகன் சண்டை போலவே இருந்த சூரியவம்சம் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது. சூரியவம்சம் படத்திற்கு முன்பு சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் நாட்டாமை. இந்த படம் கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதுவரை சரத்குமார் நடிப்பில் வெளியான மிகப்பெரிய படமாக நாட்டாமை இருந்தது அதைத் தொடர்ந்து வெளியான சூரியவம்சம் திரைப்படம் நாட்டாமை லெவலுக்கு இருக்குமா என பலரும் சந்தேகித்தனர்.

நாட்டாமையை மிஞ்சியது

நாட்டாமையை மிஞ்சியது

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான சூரியவம்சம் நாட்டாமை படத்தில் 50% ஆவது இருக்குமா என தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி ஆஸ்கர் ரவிச்சந்திரன் இடம் கேட்டுள்ளார். ப்ரிவ்யு பார்த்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் சூரிய வம்சம் படத்தில் 50 சதவீதத்தில் தான் நாட்டாமை என கூறியதை அடுத்து பூரித்துப் போனார் ஆர்பி சௌத்ரி. ரவிச்சந்திரன் கூறியது போலவே சூரியவம்சம் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகி மக்கள் கூட்டம் கூட்டமாக இப்படத்தை கண்டு ரசித்தனர். இதுவரை மிகப்பெரிய வசூல் சாதனை செய்த திரைப்படமாக சூரியவம்சம் இருந்து வருகிறது.

சூரியவம்சம் worth -ஆ

சூரியவம்சம் worth -ஆ

சூரியவம்சம் திரைப்படம் வெளியானபோது நாட்டாமை படத்துடன் ஒப்பிட்டு சூரியவம்சம் worth -ஆ எனக் கேட்டதாக விக்ரமன் பேட்டி ஒன்றில் இதுகுறித்து பகிர்ந்துள்ளார். சூரியவம்சம் வெற்றி பெறும் என தெரியும் ஆனால் நாட்டாமையை மிஞ்சும் அளவிற்கு வெற்றி பெறுமா என தெரியாது என அப்போது விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X