கேங்க்ஸ்டர் கதையுடன் ராம் கோபால் வர்மா இயக்கும் "ஆர்"... Glimpse வீடியோ வெளியிட்டு பரபரப்பு.

ஹைதராபாத் : ராம் கோபால் வர்மா இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர். இறுதியாக நாகார்ஜுனா நடித்து அவர் இயக்கிய ' ஆபீஸர் ' தெலுங்கு படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் சொல்லும்படியாக அவருக்கு அமையவில்லை.

Recommended Video

RRR Review | ரெண்டு பேறும் தாறு மாறு performance | Ram Charan | NTR | SS Rajamouli

சில படங்கள் அவர் இயக்கினாலும் அது ரசிகர்கள் மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை. ராம்கோபால் வர்மாவிடம் அவர்கள் எதிர்பார்த்த கன்டன்ட் இல்லாததால் ரசிகர்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தை அடைந்தனர். மெல்ல மெல்ல அவர் படங்களுக்கான எதிர்பார்ப்பு இல்லாமலேயே போனது.

இதற்கிடையில் ராம்கோபால் வர்மா தனது அடுத்த படத்துக்கான பெயரையும் அதில் நடிக்கும் கதாநாயகன் பற்றியும் ஒரு Glimpse வீடியோ வெளியிட அது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 ட்ரெண்ட் செட்டர்

ட்ரெண்ட் செட்டர்

நாகார்ஜூனா கதாநாயகனாக நடித்த சிவா தெலுங்கு படத்தில் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ராம் கோபால் வர்மா. முதல் படமே முத்திரை பதித்தது. அந்த காலகட்டத்தில் சிவா படம் டிரெண்ட் செட்டராக அமைந்தது. ஒரே படத்தில் இந்தியா முழுக்க பேசப்பட்டார் ராம்கோபால் வர்மா. அதுவரை இருந்த திரை மொழியை உடைத்து தனதான தனித்துவ திரை மொழியை செய்து காட்டினார். அதுவரை ஆந்திர மக்கள் பார்த்த திரைப்படங்களுக்கு நேர் எதிராக எடுக்கப்பட்ட படம் சிவா. அவரது திரைமொழி காகவே அவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. அக்காலகட்டத்தில் சிவா படம் வசூல் ரீதியாக ஒரு புதிய சாதனை படைத்தது.

 ராம்கோபால் வர்மாவும் கேங்ஸ்டரும்

ராம்கோபால் வர்மாவும் கேங்ஸ்டரும்

ராம் கோபால் வர்மா இயக்கிய காதல் படங்களை காட்டிலும் அவர் இயக்கிய கேங்ஸ்டர் படங்களான சத்யா, கம்பெனி, சர்க்கார் போன்ற படங்களே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் பெயரை ஏற்படுத்தி தந்தது. நிழல் உலகத்தில் இருக்கும் நிஜ மனிதர்களின் கதைகள் தெரிந்துகொண்டு அவர்களுடன் நெருங்கி பழகி அவைகளை படமாக எடுத்தார் ராம் கோபால் வர்மா. இவர் மும்பை நிழலுலக தாதாவான தாவுத் இப்ராஹிம் உடன் நெருங்கிய நட்பில் இருந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டார்.

 பிட்டு பட இயக்குனர்

பிட்டு பட இயக்குனர்

ராம் கோபால் வர்மா இடையில் சில காலம் படங்கள் இயக்குவதை நிறுத்தினார். அவர் இயக்கிய ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தன. அந்த காலகட்டத்தில் அவர் அதிகம் அரசியல்வாதிகளை சீண்ட ஆரம்பித்தார். தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அவரது பெயருக்கு அவரே களங்கம் ஏற்படுத்திக் கொண்டார். இதனிடையில் பெண்களை மையமாகக் கொண்டு சில படங்களை இயக்கினார். அதில் கதையைக் காட்டிலும் ஆபாசம் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். இதனால் ஒரு காலகட்டத்தில் சிறந்த இயக்குனர் என பேசப்பட்டவர் பிட்டு பட இயக்குனர் என பெயர் வாங்கினார்.

 RGV – Upendra – Gangster

RGV – Upendra – Gangster

ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் புது படத்துக்கான டைட்டில் மற்றும் கதாநாயகன் அறிமுகப்படுத்தும் Glimpse வீடியோ வெளியிட்டுள்ளார். சிகப்பு நிற ஆடையில் கன்னட நடிகர் உபேந்திரா கையில் கத்தியுடன் வெறித்தனமாக இருக்க படத்தின் பெயர் ‘ R ‘ என வைத்துள்ளார். உலகத்தில் யாரைக் கண்டும் பயம் கொள்ளாத ஒரு கேங்ஸ்டர் என ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பதிவில் Glimpse வீடியோவுடன் சேர்த்து வெளியிட்டுள்ளார். அவருக்குப் பிடித்த கேங்க்ஸ்டர் ஏரியாவில் படம் இருப்பதால் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ‘ RRR ‘ படம் வெளியாவதால் உள்நோக்கத்துடன் தனது படமான ‘ R ‘ Glimpse வீடியோ வெளியிட்டுள்ளார் எனவும் பேசப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X