கருப்பனுக்கு படையல் வைத்துவிட்டார் ஆர்.ஜே.பாலாஜி.. பிளாஸ்ட் பிளாஸ்ட்.. கருப்பு பொதுமக்கள் விமர்சனம்!

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்று படம் வெளியாகாததால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றமடைந்திருந்த நிலையில் இன்று தியேட்டரில் படம் வெளியாகி ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. படம் பார்த்த பொதுமக்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.

கருப்பு: திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர் ஒருவர், இது சாதாரண கமர்ஷியல் படம் இல்லை. பல வருடங்களுக்கு பிறகு பழைய சூர்யாவை திரையில் பார்த்த உணர்வு கிடைத்துள்ளது. குறிப்பாக 2010களில் வெளியான சூர்யா படங்களின் மாஸ், ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் ஆக்ஷன் என அனைத்தையும் நினைவூட்டும் வகையில் படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். படத்தில் எந்த ஒரு சீனும் சாதாரணமாக இல்லை. ஒவ்வொரு காட்சியும் செதுக்கி எடுக்கப்பட்ட மாதிரி இருந்தது. சீக்வென்ஸ்கள் அனைத்தும் மாஸாக இருந்தது என்று ரசிகர்கள் உற்சாகமாக விமர்சனம் தெரிவித்தனர். மேலும், கிளைமாக்ஸ் காட்சிகள் திரையரங்கையே அதிர வைத்ததாகவும், ரசிகர்கள் எதிர்பார்த்த அனைத்து அம்சங்களும் படத்தில் இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

Karuppu R J Balaji Suriya
Photo Credit:

கிளைமாக்ஸ் சூப்பர்: படம் பார்த்த மற்றொரு ரசிகர், இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் குறித்து சமூக வலைதளங்களில் பல ட்ரோல்கள் வந்திருந்தாலும், இந்த படத்தில் அவர் பின்னணி இசையால் மிரட்டியிருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். மியூசிக் படத்துக்கு மிகப்பெரிய பலம். கிளைமாக்ஸில் BGM தீப்பொறி மாதிரி இருக்கு, குடும்பத்துடன் பார்க்கக்கூடிய கமர்ஷியல் என்டர்டெய்னராக படம். தேவையற்ற கவர்ச்சி காட்சிகள் எதுவும் இல்லாமல் குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் இயக்குனர் படத்தை உருவாக்கி இருக்கிறார் என்றார்.

கருப்பனுக்கு படையல்: படம் பார்த்த மற்றொரு நபர், பிளாஸ் பிளாஸ் கம்பேக்னா இதுதான், ஆர்ஜே பாலாஜி கருப்பனுக்கு படையல் வைத்துவிட்டார். இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் பின்னிட்டாரு, ஒவ்வொரு இடத்திற்கு ஒவ்வொரு விதமான மியூசிக் போட்டு இருக்காரு,பல பேர் தியேட்டரிலேயே சாமி வந்து ஆடுகின்றனர். யாரையும் சீட்டிலேயே உக்காந்து படம் பார்க்க முடியல அந்த அளவிற்கு படம் மாஸ், தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்கும் போது தான் இந்த படத்தின் உண்மையான மாஸ் தெரியும். இது முழுக்க முழுக்க தியேட்டர் மூமெண்ட் படம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். மொத்தத்தில், 'கருப்பு' திரைப்படம் சூர்யாவுக்கு ஒரு வலுவான கம்பேக் படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X