கருப்பு பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா.. முதலமைச்சர் விஜய் பற்றிய பேச்சாகத்தான் இருக்குது.. இயக்குநர் புகழாரம்

சென்னை: சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கருப்பு. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். மேலும் ஏராளமானோர் நடித்திருக்கும் இப்படமானது மே 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பை இப்படம் சந்தித்திருக்கும் சூழலில் நேற்று படத்துடைய ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லருக்கு ஓரளவுக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் நேற்று நடந்த கருப்பு பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாலாஜி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ, கருப்பு ஆகிய இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. கங்குவா கொடுத்த அடிக்கு ரெட்ரோ மருந்திடும் என்றுதான் சூர்யாவும், அவரது ரசிகர்களும் நினைத்தார்கள். ஆனால் ரெட்ரோ ரிசல்ட்டோ கங்குவாவுக்கு பரவாயில்லை என்றே வந்தது. இது ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கமோ சூர்யா ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அவரிடமும், அவரது ரசிகர்களிடமும் சென்று கேட்டால்கூட கடைசி தியேட்டரிக்கல் ஹிட் எப்போது கொடுத்தோம் என்பதே மறந்து போயிருக்கும். அந்த அளவுக்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

R J Balaji Hails CM C Joseph Vijay at Karuppu Trailer Launch Internet Reacts
Photo Credit:

ஆர்.ஜே.பாலாஜியுடன் கூட்டணி: ரெட்ரோ படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் நடக்கவில்லை. அதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடிக்க கமிட்டானார். முதலில் இந்தப் படத்தின் கதை விஜய்க்காக எழுதப்பட்டது. அவர் நடிக்காததால் சூர்யா உள்ளே வந்தார். இதில் ஹீரோயினாக திரிஷா நடித்திருக்கிறார். சூர்யாவும், திரிஷாவும் பல வருடங்களுக்கு பிறகு சேர்ந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
உன் ரசிகர் படையிலே.. அண்ணே நாகராஜ் அண்ணே.. சீமானை கட்டியணைத்த சிஎம் விஜய்.. குவியும் மீம்ஸ்!
உன் ரசிகர் படையிலே.. அண்ணே நாகராஜ் அண்ணே.. சீமானை கட்டியணைத்த சிஎம் விஜய்.. குவியும் மீம்ஸ்!

நேற்று ட்ரெய்லர் ரிலீஸ்: படமானது மே 14ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே படத்தின் ரிலீஸ் குறித்து வதந்திகள் பரவின. அதனை மறுத்த பாலாஜியோ திட்டமிட்டபடி கருப்பு 14ஆ தேதி ரிலீஸாகும் என கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க நேற்று கருப்பு ட்ரெய்லர் வெளியானது. சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்ட்டிமென்ட் உள்ளிட்டவைகளை சேர்த்து செம கமர்ஷியலாக படம் உருவாகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கையில் தெரிகிறது.

ஆர்.ஜே.பாலாஜி பேச்சு: இந்நிலையில் நேற்று கருப்பு ட்ரெய்லர் விழாவில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, "தமிழ்நாட்டில் ஒருவரை பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருந்தன. யாரும் அவரை நம்பவில்லை. பல கேலியும் செய்தார்கள். எதிர்மறையான பரப்புரைகளும் இருந்தன. ஆனால் அவர் தன்னை தானே நம்பினார். மேலும் அவர் தனது கனவு, பார்வை, எண்ணங்களுடன் நிலைத்து நின்றார். இப்போது அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள்" என்றார்.

முதலமைச்சர் விஜய்: முன்னதாக, நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக தனித்து களமிறங்கி 108 தொகுதிகளை கைப்பற்றியது. அதனையடுத்து திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்து விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்று முடிந்ததும் மு.க.ஸ்டாலின், சீமான், அன்புமணி ராமதாஸ், ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். அதை பார்த்த பலரும் நாகரீக அரசியலை முன்னெடுத்திருக்கும் விஜய்யை பாராட்டிவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X