திரிஷாவாக இருப்பது கஷ்டம்.. கருப்பு இசைவெளியிட்டு விழா.. ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'கருப்பு' திரைப்படம் மே 14ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர் ஜே பாலாஜி, படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார்.

"கருப்பு திரைப்படம் அறிவிக்கப்பட்ட தேதியிலேயே கண்டிப்பாக வெளியாகும். இந்த படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை 'கருப்பர்' என்னை வழிநடத்திக் கொண்டே இருக்கிறார். இன்னும் அவர் என் கையை விடவே இல்லை; அவரின் இருப்பை நான் உணர்கிறேன். இந்த படத்தை ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாள் ஓட வைக்கப்போவது அவர்தான். இது மிகப்பெரிய வெற்றி படமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

Karuppu suriya Trisha
Photo Credit:

ஆர்.ஜே. பாலாஜி பேச்சு: இது ஒரு முழுமையான கமர்ஷியல் படம். முதல் பாதி மிகவும் வலுவான கதையுடன் இருக்கும். இரண்டாவது பாதியில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் சூர்யாவை பார்க்கலாம். ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு திருப்பம் இருக்கும். சூர்யா சார் அடிப்பது, பாடுவது, ஓடுவது என ரசிகர்கள் விரும்பிய சூர்யாவை இரண்டாம் பாதியில் பார்க்கலாம் என்றார். தொடர்ந்து த்ரிஷா குறித்து பேசிய ஆர்.ஜே. பாலாஜி, "த்ரிஷா எங்கள் குழுவுடன் இணைய முடியவில்லை, அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். 23 ஆண்டுகளாக தொடர்ந்து உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீப காலத்தில் அவர் செய்த கதாபாத்திரங்களில், 'கருப்பு' படத்தில் அவர் நடித்திருக்கும் வேடம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று ஆர்.ஜே.பாலாஜி பாராட்டினார்.

சூர்யாவின் கருப்பு: சூர்யாவின் 45வது படமான இப்படத்தில், த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கருப்பு படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிக்கும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' நடித்து வருகிறார். சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இத்திரைப்படம் ஜூலை மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X