twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்பு தான் எல்லாத்துக்கும் காரணம் ... ஆர்.கே.செல்வமணி நீண்ட அறிக்கை

    |

    சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிம்பு மீது அடிக்கடி ஏதாவது ஒரு புகார் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டு வந்தது. இதனால் ஒரு கட்டத்தில் சிம்புவுக்கு ரெட் கார்டு போடும் அளவிற்கு போனார்கள். பிறகு ஒரு வழியாக அந்த பிரச்சனை ஓய்ந்து சிம்புவும் சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆளே மொத்தமாக மாறி ஈஸ்வரன் படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படத்தை சிம்பு ரசிகர்கள் மட்டுமல்ல, திரைத்துரையில் உள்ள சிலரும் கொண்டாடினர். காரணம் சிம்புவின் தோற்றத்தில் மட்டுமல்ல நடவடிக்கையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டு, அவர் சரியான நேரத்தில் படத்தை முடித்து கொடுத்தது தான்.

    தாறுமாறாய் தாராளம் காட்டும் வெப் சீரிஸ் நடிகை.. 3 மில்லியனாக எகிறிய ஃபாலோயர்ஸ்!தாறுமாறாய் தாராளம் காட்டும் வெப் சீரிஸ் நடிகை.. 3 மில்லியனாக எகிறிய ஃபாலோயர்ஸ்!

    இந்நிலையில் சிம்பு மீதான பிரச்சனை மீண்டும் தலைதூக்கி உள்ளது. இது தொடர்பாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன் மீது தவறான குற்ச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    செல்வமணியின் அறிக்கை விபரம்

    செல்வமணியின் அறிக்கை விபரம்

    தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று அவசர செயற்குழுவை கூட்டி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் உள்ள ஒப்பந்தம் அவர்களை கட்டுப்படுத்தாது என தீர்மானம் எடுதத்ததாக பத்திரிக்கைகளில் அறிவித்துள்ளார்கள். இதுவரை எங்களுக்கு எந்த கடிதமும் முறைப்படி அனுப்பவில்லை.

    என் மீதான குற்றச்சாட்டு தவறானது

    என் மீதான குற்றச்சாட்டு தவறானது

    சம்மேளனத்தின் தலைவராகிய நான் தயாரிப்பாளர்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவதாக தவறான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். இது முற்றிலும் தவறான தகவலாகும். தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிர்வாகிகளாக உள்ள அனைவரையும் விட, தயாரிப்பாளர் நலனுக்காக நாங்கள் பல விஷயங்களை செய்து தந்துள்ளோம்.

    கடுமையாக பேச விரும்பவில்லை

    கடுமையாக பேச விரும்பவில்லை

    இது படமெடுக்கின்ற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்கு தெரியும். தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக உள்ள முரளி எங்கள் இனி நண்பர், மறைந்த இயக்குனர் ராமநாராயணனின் புதல்வர் ஆவார். அவர் மீது உள்ள மரியாதையில் நான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த விரும்பவில்லை. இருப்பினும் நடந்த விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    ஐசரி கணேசன் தான் கேட்டார்

    ஐசரி கணேசன் தான் கேட்டார்

    நடிகர் சிம்பு சம்மந்தப்பட்ட நான்கு தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை இருப்பதால் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு ஒத்துழைப்பு தரக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சம்மேளனத்தை கேட்டுக் கொண்டது. சம்மேளனமும் அதன் படியே நடந்து வந்தது. இதற்கிடையே தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிக்கும் புதிய படத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வெளியூரில் படப்பிடிப்பு நடத்தி கொள்கிறோம் என்றும், மேலும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுவதற்குள் அனைத்து பிரச்சனைகளையும் பேசி சரி செய்த பிறகே சென்னையில் படப்பிடிப்பை துவங்குவோம் என்ற உத்திரவாதத்தை சம்மேளனத்திற்கு வைக்க அதன்படி தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஐசரி கணேசனின் கோரிக்கையை சம்மேளனம் தெரிவித்தது.

    விதிகளை மீறவில்லை

    விதிகளை மீறவில்லை

    தயாரிப்பாளர்கள் சங்கமும் தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கு படப்பிடிப்பு நடத்திக் கொள்ள அனுமதி தந்த பிறகே நாங்களும் அப்படப்பிடிப்பில் கலந்துகொண்டோம். இதில் சம்மேளனத்தின் தவறு ஏதும் இல்லை. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமோ அல்லது அதன் தலைமை பொறுப்பில் இருக்கின்ற ஆர்.கேசெல்வமணியாகிய நானோ தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான கையெழுத்திடப்பட்ட எந்த ஒப்பந்தத்தின் விதிகளையும் மீறவில்லை.

    யாரோ வழிநடத்துகிறார்கள்

    யாரோ வழிநடத்துகிறார்கள்

    ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பின்புலத்தில் யாரோ இருந்து வழி நடந்துகிறார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. நியாயத்திற்கு புறம்பாக எங்கள் சம்மேளன தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முறையிட்டு தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் சமூகமான தீர்வு கிடைக்கப் பெறுவோம் என்பதை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

    சிம்பு படப்பிடிப்பிற்கு பிரச்சனை

    சிம்பு படப்பிடிப்பிற்கு பிரச்சனை

    அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 4 தயாரிப்பாளர்களுடன் சிம்புவின் பிரச்சனை தீர்க்கப்பாடமல் உள்ளது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தை முடித்து விட்டு, கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பை துவக்கி விட்டார் சிம்பு. இதற்கிடையில் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்துடனான பிரச்சனை தலைதூக்கி, சென்னையில் படப்பிடிப்பை நடத்த பிரச்சனையாகி உள்ளது.

    English summary
    r.k.selvamani issued long statement against simbu. because of this simbu's new film shooting is in troble. now simbu is acting in gowtham menon's vendhu thanindhadhu kaadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X