ஆர்.கே.சுரேஷ் மாறுபட்ட இருவேடங்களில் நடிக்கும் கைலாசகிரி

Recommended Video

Actor RK Suresh Interview: விஷால் தனிப்பட்டு இருக்கறதுனாலதான் எங்களுக்கு கோவமே!- வீடியோ

சென்னை: ஆர்.கே.சுரேஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் கைலாசகிரி படத்தின் இயக்குநர் தோட்டா கிருஷ்ணா, இப்படத்தைப் பற்றி கூறும்போது, ஆயிரம் வருடம் பழமையானதும் அதீத சக்தி கொண்டதுமான மரகதலிங்கம் உள்ள கோவிலில் அந்த லிங்கத்தை திருடி விற்க ஒரு திருட்டுக் கும்பல் ஈடுபடுகின்றது. அதை தடுத்து லிங்கத்தை காப்பாற்ற ஆர்.கே.சுரேஷ் முயல்கிறார். எப்படி முறியடிக்கிறார் என்பதே கதை என்றார்.

ஸ்ரீமதி ராவூரி அல்லிகேஸ்வரி வழங்கும் ஸ்ரீ அப்போலோ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்தின் பெயர் கைலாசகிரி.

R.K.Suresh Acts dual roll in Kailasagiri Movie

ஆர்.கே.சுரேஷ் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இத் திரைப்படத்தில், மதுபாலா, சாகர், முரளி கிருஷ்னா, கண்டா சீனிவாசராவ், பூமாரெட்டி, மேகனா ஸ்ரீ லட்சுமி, பேபி ஹர்ஷீதா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை சாய்மோகன் குமார் எழுத, கன்ஷியாம் இசையமைக்க, முகமது ரபி ஒளிப்பதிவையும், சிவசங்கர் நடன பயிற்சியையும், கிருஷ்ணம் ராஜு சண்டை பயிற்சியையும், ஜெகதீஷ் பாபு படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

R.K.Suresh Acts dual roll in Kailasagiri Movie

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படத்தை ராவூரி வெங்கடசாமி மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளார். தெலுங்கில் 18 வெற்றிப் படங்களை இயக்கியுள்ள தோட்ட கிருஷ்ணா கைலாசகிரி படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார்.

அவர் கைலாசகிரி படத்தை பற்றி கூறும்போது, ஆயிரம் வருடம் பழமையானதும் அதீத சக்தி கொண்டதுமான மரகதலிங்கம் உள்ள கோவிலில் அந்த லிங்கத்தை திருடி விற்க ஒரு திருட்டுக் கும்பல் ஈடுபடுகின்றது.

R.K.Suresh Acts dual roll in Kailasagiri Movie

அதை தடுத்து லிங்கத்தை காப்பாற்ற ஆர்.கே.சுரேஷ் முயல்கிறார். எப்படி முறியடிக்கிறார். சிவனின் சக்தி எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை கிராஃபிக் காட்சிகள் மூலம் சிறப்பாக படமாக்கி இருக்கிறோம். ஆக்ஷன், குடும்பம், காதல், பக்தி என அனைத்தும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

ஆந்திராவில் சித்தூர், திருப்பதி, ஹைதராபாத், காணி பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஆகிய இடங்களில் படமாக்கி இருக்கிறோம். தயாரிப்பாளர் இப்படத்தை நவம்பரில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X