கதறி அழுத ஆர்.கே.சுரேஷ்.. மறைந்த அண்ணன் உடலைப் பார்த்து.. கடைசி நிமிடங்கள்
இராமநாதபுரம்: நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷின் அண்ணன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார். இவரது மறைவு ஆர்.கே. சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தனது அண்ணனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு, இறுதிச் சடங்குகளை ஆர்.கே. சுரேஷ் செய்வதற்கு முன்னர் இருந்தே தேம்பித் தேம்பி அழுதார். அண்ணனும் அவரும் ஒன்றாக வளர்ந்தது, தோளுக்கு தோள் நின்றது உள்ளிட்ட பலவற்றை நினைத்து நினைத்து அவர் அழுகிறார் என்று பார்த்தாலே தெரிகிறது என்பது போல இருந்தது.
ஆர்.கே. சுரேஷ்க்கு சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் சவாலான காலங்கள் இருந்துள்ளது. அப்போதெல்லாம் அவருக்கு பக்கபலமாக இருந்து உற்ற துணையாக இருந்தது அவரது அண்ணன் தான் என்று பலரும் கூறி வருகின்றனர். அப்படி இருக்கையில் குடும்பத்தின் ஆணிவேராக இருந்தவர் மறைந்ததால் ஆர்.கே. சுரேஷ் மிகவும் உடைந்து விட்டார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்.



Click it and Unblock the Notifications