twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive: 'மெட்ராசில் ஒரு மெஸ்ஸி'... இயக்குநராகும் ஆர்.கே.சுரேஷ்.. ஹீரோ நம்ம யோகி பாபு!

    'மெட்ராசில் ஒரு மெஸ்ஸி' என்ற படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார்.

    |

    Recommended Video

    அஜித் சார் மீதான காதலை பற்றி இயக்குனரான ஆர்.கே.சுரேஷ் பேட்டி

    சென்னை: மெட்ராசில் ஒரு மெஸ்ஸி என்ற படத்தின் மூலம் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் யோகி பாபு.

    தமிழில் முன்னணி காமெடியர்களுள் ஒருவராக இருப்பவர் யோகிபாபு. கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. அப்படத்தில் வரும் 'எனக்கு கல்யாண வயசு தான்' பாடல் அவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

    இப்பட வெற்றியைத் தொடர்ந்து வடிவேலு, சந்தானம் போன்றவர்களின் வரிசையில், கூர்க்கா படத்தின் மூலம் அவரும் ஹீரோவாகப் போவதாகச் செய்திகள் வெளியானது.

    கூர்க்கா:

    கூர்க்கா:

    ஆனால், அதனை அவர் வீடியோ மூலம் மறுத்திருந்தார். கூர்க்கா படத்தில் வெளிநாட்டுக்காரரும், நாயும் தான் ஹீரோ என்றும், வழக்கம் போல் தான் காமெடியனாகத் தான் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

    கதையின் நாயகன்:

    கதையின் நாயகன்:

    இந்நிலையில், நடிகரும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், யோகி பாபுவை நாயகனாக்கி ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்க இருக்கிறார்.

    மெட்ராசில் ஒரு மெஸ்ஸி:

    மெட்ராசில் ஒரு மெஸ்ஸி:

    மெட்ராசில் ஒரு மெஸ்ஸி என இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான படமாக இது இருக்கும் என ஆர்.கே.சுரேஷ் கூறுகிறார். யோகி பாபு நடிப்பதால் படத்தில் நிச்சயம் காமெடிக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.

    இயக்குநர் அவதாரம்:

    இயக்குநர் அவதாரம்:

    இப்படம் தவிர ஆர்.கே.சுரேஷ் தண்ணி வண்டி என்றொரு படத்தையும் இயக்க இருக்கிறார். பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் மூலம் கொடூர வில்லனாக அறிமுகமான இவர், தற்போது பில்லா பாண்டி, வேட்டை நாய் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தயாரிப்பு, நடிப்பு என ஒருபுறம் பிசியாக இயங்கி வரும் சூழலில், இயக்கத்திலும் அவர் கவனம் செலுத்தத் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Comedy actor Yogi Babu will be playing lead role in R.K.Suresh directorial 'Madrasil oru Messi'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X