Kaaduvetty: ஆர்கே சுரேஷின் காடுவெட்டி படம் எப்படி இருக்கு.. பொதுமக்கள் சொல்வது என்ன?
சென்னை: தயாரிப்பாளராக கொடிக்கட்டி பறந்த ஆர்கே சுரேஷின் காடுவெட்டி திரைப்படம் இன்று வெளியாகிறது. படம் இன்று வெளியான நிலையில் முதல் காட்சியை பார்க்க தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து படத்தை கொண்டாடினார்கள். காடுவெட்டி படம் பார்த்த பொதுமக்களின் கருத்தை பார்க்கலாம்
இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் பாமக கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த காடுவெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் காடுவெட்டி. இந்த படத்திற்கு சென்சார் போர்டு நிறைய கட்டுப்பாட்டுகள் விதித்தது. காடுவெட்டி என்ற டைட்டிலேயே பயன்படுத்தக் கூடாது என சென்சார் போர்டு தடை விதித்த நிலையில் அதன் பிறகு விளக்கம் கொடுத்து டைட்டில் வாங்கி இருந்தனர்.

காடுவெட்டி: ஜாதி ரீதியான படம் இல்லை என்பதை முன்பே ஆர்கே சுரேஷ் கூறியிருந்தார். ஆகையால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தியேட்டரில் இந்த படம் வெளியான நிலையில்,படம் பார்த்த ரசிகர் ஒருவர், இது காடுவெட்டி குருவின் வாழ்க்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை என்று சொல்லிவிட முடியாது. இந்த சமுதாயத்தில் பொதுவாக நடப்பதை படமாக எடுத்து இருக்கிறார்கள். இந்த படத்தை இவங்கதான் பார்க்கணும், அவங்கதான் பார்க்கணும் என்று இல்லை இது அனைவருக்குமான படம் என்றார்.

கல்லூரி மாணவர்கள் பார்க்க வேண்டிய படம்: இதையடுத்து படம் பார்த்த மற்றொரு ரசிகர், இந்தமாதிரி படங்கள் வருஷத்திற்கு மூன்று வரவேண்டும். இந்த படம் கல்லூரி மாணவர்களுக்காக முக்கியமாக எடுக்கப்பட்ட படம். இந்த படத்தை பார்த்து கல்லூரி மாணவர்கள் யோசிக்க வைக்கும். அதே போல படம் பார்க்கும் போது, இது சாதி படம் என்று பார்க்காமல் சினிமா என்றும், ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கும் வரலாறோடு பார்க்க வேண்டிய படம். சாதி தலைவர்களை நம்பி மாணவர்கள் பயணிக்கக்கூடாது என்பதை இந்த படம் சொல்லி இருக்கு என்றார்.
தேவையில்லாத பாடல்கள்: படம் பார்த்து கருத்து சொன்ன மற்றொரு ரசிகர், படத்தில் பல இடங்களில் பாடல் தேவையே இல்லாமல் வருகிறது. காதல் பண்ணா பாட்டு, சமைச்சா பாட்டு, அடிச்சா பாட்டு என எதற்கு எடுத்தாலும் பாட்டு வருகிறது. ஆனால், பாடல்களும் வரிகளும் நல்லா இருக்கு


Click it and Unblock the Notifications











