தமிழ் சினிமா வரலாற்றில்.. தன்னைத்தானே அப்படி சொல்லிக்கொண்ட மாதவன்..ஆறுதல் சொல்ல குவிந்த ரசிகைகள்!

By

சென்னை: நடிகர் மாதவன் சமூக வலைத்தளத்தில் அப்படி சொன்னதற்கு ஏராளமான ரசிகர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

பிரபல நடிகர் மாதவன், தமிழ், தெலுங்கு, இந்தி என ரவுண்ட் கட்டி நடிப்பவர். மும்பையில் வசித்து வரும் அவர், இப்போது நிசப்தம் படத்தில் நடித்துள்ளார்.

அனுஷ்கா, அஞ்சலி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் ரிலீஸுக்கு ரெடியான நேரத்தில் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட்

ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட்

இதனால் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையான ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். அடுத்து மாறா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், லாக்டவுன் காரணமாக, வீட்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் ஜூம் வீடியோவிலும் சமூக வலைத்தளங்களின் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர், நடிகைகளில் மாதவனும் ஒருவர். கடந்த சில நாட்களுக்கு முன், 'மின்னலே' இந்தி ரீமேக்கான 'ரெஹ்னா ஹை தேர்ரே தில் மே' படத்தின் இரண்டாம் பாகம் பற்றியும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின.
மாதவனும் தியா மிர்ஷாவும் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இதை நடிகர் மாதவன் மறுத்திருந்தார்.

யானைக்கு உள்ளாடை

'அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய வதந்திகளை படித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வயதில் நான், மாதவ் சாஸ்திரி (மின்னலே இந்தி ரீமேக்கில் மாதவன் பெயர்) கேரக்டரில் நடிப்பது யானைக்கு உள்ளாடை அணிவது போல இருக்கும் என்று கிண்டலாகக் கூறி இருந்தார். இந்நிலையில் தனது நடனத்தை கிண்டல் செய்து ஆர்.மாதவன் இன்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

மோசமான டான்சர்

மோசமான டான்சர்

அது கல்யாண வீட்டில் மாதவன் நடனமாடும் காட்சி. இதை ஷேர் செய்துள்ள நடிகர் மாதவன், தமிழ் சினிமா வரலாற்றில் மிக மோசமான டான்சர் என்று தன்னைத் தானே கிண்டலடித் துள்ளார். இதற்கு பல ரசிகைகள், அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். 'எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. நீங்க வந்து புன்னகை செய்தாலே போதும் மாதவன்' என்று தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் தெரியாது என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X