Madhavan Net Worth: ஹேப்பி பர்த்டே மேடி.. மாதவனுக்கு 53 வயசாகிடுச்சா.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சென்னை: சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் மாதவன் சீனியர் நடிகராகவும் சின்ஸியரான இயக்குநராகவும் கடந்த ஆண்டு மாறிவிட்டார். இன்று அவர் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சில இந்தி சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்த மாதவனை இயக்குநர் மணிரத்னம் 2000ம் ஆண்டு அலைபாயுதே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.

R Madhavan celebrates his 53rd birthday today, lets check about his net worth here

அந்த படம் ஓடவில்லை என்றால் பெட்டிப் படுக்கையை தூக்கிக் கொண்டு மீண்டும் மும்பைக்கே கிளம்ப இருந்த மாதவனை தமிழ் ரசிகர்கள் தாங்கிப் பிடித்த நிலையில், சாக்லேட் பாயாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 53வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் மாதவனின் குடும்பம், சம்பளம் மற்றும் சொத்து விவரங்கள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம் வாங்க..

53 வயசாகிடுச்சு: நடிகர் மாதவன் 1970ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி பிறந்தவர். இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேடி என இளம் பெண்களின் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்ட வெள்ளை மாதவனுக்கு 53 வயசாகிடுச்சா என பலரும் ஷாக் ஆகி உள்ளனர்.

R Madhavan celebrates his 53rd birthday today, lets check about his net worth here

ராக்கெட்ரி படத்தை கடந்த ஆண்டு முதன் முறையாக இயக்கி இயக்குநர் அவதாரமும் எடுத்திருந்த மாதவன் அடுத்ததாக ஜிடி நாயுடுவின் பயோபிக் படத்தில் ஜிடி நாயுடுவாகவே நடித்து வருகிறார்.

மாதவனின் அழகான குடும்பம்: அலைபாயுதே படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே 1999ம் ஆண்டு சரிதா பிர்ஜே என்பவரை திருமணம் செய்துக் கொண்டு தான் சினிமாவில் காதல் இளவரசனாக அத்தனை டாப் ஹீரோயின்களிடம் டூயட் பாடிக் கொண்டிருந்தார் மாதவன்.

மாதவனின் ஒரே மகன் வேதாந்த் மாதவன் அப்பாவின் பெயரை காப்பாற்றும் விதமாக உலகளவில் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களாக குவித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

R Madhavan celebrates his 53rd birthday today, lets check about his net worth here

மாதவனின் சம்பளம்: நடிகர் மாதவன் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் தனியாக ஹீரோவாக நடித்தும் வருகிறார். தமிழில் திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள மாதவன் ஜிடி நாயுடு படத்திலும் நடித்து வருகிறார்.

சராசரியாக ஒரு படத்துக்கு தற்போது மாதவன் 12 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் விளம்பரம் உள்ளிட்டவற்றில் மேலும், அதிகமாக சம்பாதித்து வருகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

R Madhavan celebrates his 53rd birthday today, lets check about his net worth here

சொத்து மதிப்பு: நடிகர் மாதவன் சென்னையில் கடந்த 2011ம் ஆண்டு ஒரு பெரிய வீடு வாங்கினார். அதன் மதிப்பு 18 கோடி ரூபாய் என்கின்றனர். கார்கள் வாங்கி சேர்ப்பதில் எல்லாம் பெரிய ஆர்வத்தை மாதவன் காட்டவில்லை என்றும் ரேஞ்ச் ரோவர், ஆடி மற்றும் BMW உள்ளிட்ட கார்கள் மட்டுமே அவரிடம் இருப்பதாக கூறுகின்றனர்.

அதிகபட்சமாக நடிகர் மாதவன் 110 கோடி ரூபாய் சொத்துக்களை கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இளம் நடிகர்கள் 30 கோடி, 50 கோடி என சம்பளம் கேட்டு வரும் நிலையிலும், பெரிதாக ஆசைப்படாமல் வித்தியாசமாக எதையாவது செய்து ரசிகர்களை ஹேப்பியாக்க வேண்டும் என்பதிலேயே மாதவன் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X