For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பட புரமோஷனுக்காக நடிகையுடன் படு நெருக்கமாக மாதவன் நடத்திய போட்டோஷூட்.. கலாய்க்கும் ரசிகர்கள்!

  |

  மும்பை: நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படம் பாராட்டுக்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடவை சந்தித்தது.

  விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை மாதவன் படமாக இயக்கி இருந்த நிலையில், அந்த கதைக்கு எதிராக சில விஞ்ஞானிகளும் கருத்து தெரிவித்து இருந்தது பரபரப்பை கிளப்பியது.

  இந்நிலையில், விரைவில் வெளியாக உள்ள பாலிவுட் படத்திற்காக நடிகை மாதவன் இளம் நடிகையுடன் நடத்திய போட்டோஷூட் வீடியோ சர்ச்சையை கிளப்பி உள்ளது.

  தயாரிப்பாளர் பர்ஸை காலி பண்ணும் கிரிஞ்சு நடிகை.. அப்படியொரு பந்தாவாம்.. பில்டப்பாம்! தயாரிப்பாளர் பர்ஸை காலி பண்ணும் கிரிஞ்சு நடிகை.. அப்படியொரு பந்தாவாம்.. பில்டப்பாம்!

  ராக்கெட்ரி

  ராக்கெட்ரி

  மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸில் எந்தவொரு சாதனையையும் படைக்கவில்லை. தமிழில் நடிகர் சூர்யா கேமியோவாக நடித்திருந்தார். இந்தியில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்தும் எந்த பயனும் இல்லை என ட்ரோல்கள் குவிந்தன. நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளியான ராக்கெட்ரி படத்தின் கதை தொடர்பான விவாதங்களும் ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பின.

  மீண்டும் ரொமான்டிக் படம்

  மீண்டும் ரொமான்டிக் படம்

  ராக்கெட்ரி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகி உள்ள ரொமாண்டிக் திரைப்படம் வரும் செப்டம்பர் 23ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் கூக்கி குலாட்டி இயக்கத்தில் உருவாகி உள்ள அந்த படத்திற்கு Dhokha Round D Corner என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டி-சீரிஸ் நிறுவனத்தை சேர்ந்த குஷாலி குமார் மாதவனுக்கு ஜோடியாக சினிமாவில் அறிமுகமாகிறார்.

  குஷாலி குமார்

  குஷாலி குமார்

  T-Series நிறுவனர் மறைந்த குல்ஷன் குமாரின் மகளும் தற்போது அந்த நிறுவனத்தை நடத்தி வரும் பூஷன் குமாரின் சகோதரியுமான குஷாலி குமார் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே மாதவன் போன்ற பெரிய நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு ரொம்பவே சந்தோஷம் என பேசி உள்ளார்.

  போட்டோஷூட்டுக்கு படு நெருக்கமாக

  போட்டோஷூட்டுக்கு படு நெருக்கமாக

  இந்நிலையில், அடுத்த வாரம் வெளியாக உள்ள தனது படத்தை புரமோட் செய்வதற்காக அறிமுக நடிகையுடன நடிகர் மாதவன் படு நெருக்கமாக கட்டிப் பிடித்து ரொமான்ஸ் செய்யும் படி எடுத்த போட்டோஷூட் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. ஜீன்ஸ் டிசர்ட் அணிந்து கொண்டு மாதவன் குஷாலி குமாரை கட்டிப்பிடித்தபடி நடத்திய போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

  இப்படியொரு புரமோஷன் தேவையா

  இப்படியொரு புரமோஷன் தேவையா

  சாக்லெட் பாய் இமேஜ் எல்லாம் போய் ரொம்ப காலம் ஆகுது மேடி சார் என்றும் இந்த வயசுல இது தேவையா என்றும் புரமோஷனுக்கு இப்படியா கட்டிப்பிடிச்சி போட்டோஷூட் நடத்துவீங்க என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. மாதவனுக்கும் குஷாலிக்கும் கதைப்படி திருமணம் ஆகி இருக்க அவர்கள் குடும்பத்திற்குள் வரும் தீவிரவாதியால் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை என்பது சமீபத்தில் வெளியான டிரைலரிலேயே தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

  English summary
  Actor R Madhavan done a intimacy promotion with debutant actress Khushalii Kumar gets trolled by bollywood fans. Madhavan's directorial debut movie Rocketry Nambi Effect didn't do well at the box office.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X