அமிர் கானை தொடர்ந்து மாதவனுக்கும் கொரோனா தொற்று உறுதி
சென்னை : இந்த வார துவக்கத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அமிர் கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று நடிகர் மாதவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video


அமிர்கானும், மாதவனும் இணைந்து 3 இடியட்ஸ் படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் போஸ்டரை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள மாதவன், அமிர்கானை பிடித்த வைரஸ் தன்னையும் தொற்றிக் கொண்டது. ஆனாலும் எல்லாம் நன்மைக்கே. விரைவில் கோவிட் சரியாகும் என குறிப்பிட்டுள்ளார்.மாதவன் விரைவில் குணமடைய அவரது நண்பர்கள் வாழ்த்தும், பிராரத்தனையும் தெரிவித்துள்ளனர். மாதவனும், விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளதை ரசிகர்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.

மாறா வெப் சீரிசை தொடர்ந்து, ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் என்ற படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்த படம் கொரோனா காரணமாக தாமதமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











