Don't Miss!
- News
"அந்த 3 வார்த்தை".. கவனிச்சீங்களா, மோடியை வைத்துக் கொண்டே கெத்து காட்டிய முதல்வர்.. டென்ஷனில் பாஜக
- Finance
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Technology
Realme GT Neo 3 Naruto Limited Edition அறிமுகம்.. ஆரஞ்சு நிறத்தில் அட்டகாச லுக்.. எப்போ வாங்கலாம்?
- Automobiles
நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர்... இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதை நான் மறக்கவே மாட்டேன்.. நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்த மகாராஷ்ட்ரா கல்லூரி!
சென்னை: நடிகர் மாதவனுக்கு மகாராஷ்ட்ராவை சேர்ந்த கல்லூரி ஒன்று கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.
இந்தி டிவி சீரியல்களில் அறிமுகமான நடிகர் மாதவன், தமிழில் இயக்குநர் மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமானார்.
பிக்
பாஸ்
நிகழ்ச்சியில்
6
லட்சத்தை
தூக்கிட்டு
ஓடினாரா
காஞ்சனா
நடிகை?
பரபரக்கும்
ரசிகர்கள்!
சமீபத்தில் வெளியான அவரது மாறா திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பான் இந்திய நடிகர்
இஸ் ராட் கி சுப் நஹீன் எனும் பாலிவுட் படத்தில் பெயர் தெரியாத ரோலில் நடித்த மாதவன், இன்ஃபெர்னோ எனும் ஆங்கில படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறியப்பட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடா, மலாய் உள்ளிட்ட மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்து பான் இந்திய நடிகராக வலம் வருகிறார் மாதவன்.

டாக்டர் மாதவன்
மேடி என செல்லமாக அழைக்கப்பட்ட நடிகர் மாதவன், இனிமேல் டாக்டர் மாதவன் என கெளரவமாக அழைக்கப்படுவார். திரைத் துறைக்கும் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பணிகளை பாராட்டி மகாராஷ்ட்ராவின் கோலாப்பூரை சேர்ந்த டி.ஒய். பட்டீல் கல்லூரி இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை (D.Litt) வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.

மறக்கவே மாட்டேன்
டாக்டர் பட்டத்தை பெற்ற நடிகர் மாதவன், இதை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் எனக் கூறி அந்த கல்வி குழுமத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மாதவன் ரசிகர்கள் அதை அதிகளவில் ஷேர் செய்து பாராட்டி வருகின்றனர்.

ராக்கெட்ரி
மாதவன் நடிப்பில் சைலன்ஸ் மற்றும் மாறா திரைப்படங்கள் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகின. மாதவன் முதன்முறையாக இயக்கி வரும் அவரது கனவு திரைப்படமான ராக்கெட்ரி படம் எப்போ வரும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த படம் ஒடிடி தளத்தில் ரிலீசாகாமல் தியேட்டரில் வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கை.