மாதவனின் ‘ராக்கெட்ரி‘..பில்டப் இருந்த அளவுக்கு வசூல் இல்லையே !
சென்னை : நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி நடித்துள்ள "ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'' திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இத்திரைப்படம் விவரித்துள்ளது. 80 வயதான நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார்.
முதல் படத்திலேயே ரிஸ்க்கான கதையை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ள மாதவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

சாக்லெட் பாய் மாதவன்
ஏ...அழகிய தீயே.. என மின்னல் படத்தில் சாக்லெட் பாயாக நம் மனதில் இடம் பிடித்த மாதவன். ராக்கெட்ரி படத்தில் இஸ்ரோ நம்பி நாராயணனான வாழ்ந்து அனைவரையும் ஒரு நொடி மெய்சிலிர்க்க வைத்துவிட்டார். நாராயணனின் 29 வயதுக்கும் 79 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பங்களை இப்படம் சொல்வதால், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி, உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நம்பி நாராயணனாகவே வாழ்ந்து இருக்கிறார்.

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்
இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில், அவர் படத்திலிருந்து விலகியதை அடுத்து நடிகர் மாதவன் இப்படத்தை இயக்கினார். ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, ஸ்காட்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டது.

துணிச்சலான செய்தியாளர்
இப்படத்தில் நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அதாவது நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் துணிச்சல் மிகுந்த செய்தியாளராக நடித்துள்ளார். விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கேரக்டரில் கடைசி ஐந்து நிமிடம் மிரட்டிய சூர்யா கதாபாத்திரம் போல இந்த கதாபாத்திரமும் பேசப்பட்டு வருகிறது.

எதிர்பார்த்த வசூல் இல்லை
இந்நிலையில்,இத்திரைப்படம் வெளியாகி 6 நாட்களாகி உள்ள நிலையில், ராக்கெட்ரி பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை 5ந் தேதி மட்டும் இப்படம் ரூ.1.30 கோடியை வசூலித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அது வசூலை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படம் வெளியாக 6 நாட்களில் முடிவடைந்துள்ள நிலையில் ராக்கெட்ரி படம் இந்தியாவில் 15 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வசூல் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











