twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாதவன் படத்துக்கு கிடைத்த ராஜ மரியாதை.. கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ராக்கெட்டரி!

    |

    சென்னை: மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்டரி திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கான்ஸ் திரைப்பட விழாவில் இந்திய அரசு சார்பில் அந்த படம் திரையிடப் படப் போகிற செய்தி வெளியாகி உள்ளது.

    75வது கான்ஸ் திரைப்பட விழா வரும் மே 17 முதல் மே 25ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில், முதன் முறையாக கான்ஸ் திரைப்பட விழாவில் 'Country of Honour' என ஒரு தேசத்தை சிறப்பிக்கும் முயற்சியை இந்த ஆண்டு முதல் தொடங்குகிறது. அதில், முதல் நாடாக இந்தியா அந்த அங்கீகாரத்தை பெற தேர்வாகி உள்ளது.

    நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம்.. மாதவன் மகன் சாதனை.. அக்ஷய் குமார், விவேக் அக்னிஹோத்ரி பாராட்டு!நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம்.. மாதவன் மகன் சாதனை.. அக்ஷய் குமார், விவேக் அக்னிஹோத்ரி பாராட்டு!

    மாதவனின் ராக்கெட்டரி

    மாதவனின் ராக்கெட்டரி

    நடிகர் மாதவன் முதல் முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்து இயக்கி உள்ள திரைப்படம் ராக்கெட்டரி. இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையை படமாக இயக்கி நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    75வது கான்ஸ் திரைப்பட விழா

    75வது கான்ஸ் திரைப்பட விழா

    உலகளவில் பிரசித்தி பெற்ற கான்ஸ் திரைப்பட விழா இந்த ஆண்டு தனது 75வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. வரும் மே 17ம் தேதி தொடங்கும் இந்த விழா மே 25ம் தேதி நிறைவடைகிறது. சர்வதேச திரைப்படங்கள் பல இந்த கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளும், அங்கீகாரங்களும் வழங்கப்படும்.

    இந்தியாவுக்கு மரியாதை

    இந்தியாவுக்கு மரியாதை

    முதன் முதலாக இந்த ஆண்டு முதல் Country of Honour எனும் ஒரு கெளரவத்தை கான்ஸ் திரைப்பட விழா நடத்தும் அமைப்பு கொண்டு வந்திருக்கிறது. சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை கொண்டாடி வரும் இந்தியாவுக்கு முதன் முறையாக அந்த மரியாதை வழங்க திட்டமிட்டுள்ளது கான்ஸ் அமைப்பு. இந்த விழாவில் பல வர்த்தக ரீதியான விஷயங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன.

    மோடி ட்வீட்

    மோடி ட்வீட்

    கான்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராக்கெட்டரி திரைப்படத்தை இந்திய அரசு சார்பில் World Premiere ஆக ரிலீஸ் செய்ய உள்ளனர். தற்போது இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். கடந்த சம்மருக்கே வெளியாகவிருந்த ராக்கெட்டரி திரைப்படமும் கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில், கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பாராட்டி உள்ளார்.

    Recommended Video

    Tharshan Exclusive | Koogle Kuttappa Part 2 க்கு நான் Ready | Filmibeat Tamil
    ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுறாங்க

    ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுறாங்க

    தொடர்ந்து பல பெரிய படங்களின் வெளியீட்டு உரிமைகளை வாங்கி ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டு வராங்க.. இந்நிலையில், வரும் ஜூலை 1ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. உலகமெங்கும் ரசிகர்களுக்காக ராக்கெட்டரி திரைப்படம் தியேட்டரில் வெளியாக போகிறது.

    English summary
    R Madhavan's Rocketry to Premiere At Cannes Film Festival by Indian Government and also India gets its Country of Honour at Cannes Film Festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X