Ind vs Aus: எனக்கு மட்டும் தான் ஆஸி., 40 பேரோட விளையாடுறது போல தெரியுதா?.. மாதவன் டைமிங் ட்வீட்!
சென்னை: உலக கோப்பை 2023ஐ வெல்ல இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
ஆரம்பத்தில் ரோகித் சர்மா அதிரடி காட்டி ஆடினார். ஆனால், அவர் அவுட் ஆன நிலையில், அவருக்கு பின்னர் வந்த யாருமே அந்தளவுக்கு சிறப்பான ஆட்டத்தை விளையாடவில்லை.

விராத் கோஹ்லி நிதானமாக ஆடி 50 அடித்த உடன் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். இந்நிலையில், ஒட்டுமொத்த பிரபலங்களும் ரசிகர்களும் கிரிக்கெட் போட்டியை பார்த்து வரும் நிலையில், நடிகர் மாதவன் போட்ட ட்வீட் சோஷியல் மீடியாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறைவான ரன்கள்: இந்திய அணியின் ஆட்டம் சொதப்பலாகவே இருந்தது. வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்து பவுலிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலியா அணி இதுவரை 41/2 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி வாகை சூடுவது பவுலர்கள் மற்றும் ஃபீல்டிங் செய்பவர்களின் கையில் தான் உள்ளது. பேட்டிங் ஆடியவர்கள் சுமாரான ஆட்டத்தையே இன்று வெளிப்படுத்தி உள்ளனர்.
40 பேர் ஃபீல்டிங்: இந்நிலையில், நடிகர் மாதவன் இந்திய அணி அடுத்தடுத்து எங்கே அடித்தாலும் அவுட் ஆகி வருவதும், பல ஓவர்களுக்கு பவுண்டரிகளை விளாச முடியாமல் தடுமாறியதையும் பார்த்த நடிகர் மாதவன், எங்கே பார்த்தாலும் ஃபீல்டர்களா இருக்காங்களேப்பா என்றும் 40 பேர் ஆஸ்திரேலியாவுக்காக ஃபீல்டிங் செய்வது போன்ற உணர்ச்சி எனக்கு மட்டும் தான் இருக்கா என ட்வீட் போட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட்டை ரசிகர்கள் தீயாக ஷேர் செய்து வருகின்றனர்.
கடைசி வரை நம்பிக்கை: வெற்றி தோல்வியை கடந்து கடைசி வரை டஃப் ஆன ஒரு விளையாட்டை கொடுத்தாலே ரசிகர்களுக்கு அது உற்சாகத்தை அளிக்கும். இந்திய மண்ணில் நடைபெறும் உலக கோப்பை போட்டி என்பதால் கடைசி வரை இந்தியா வெல்லும் என்கிற நம்பிக்கை உள்ளது. வெயிட் பண்ணிப் பார்ப்போம். அப்படியே தோற்றாலும் அது தோல்வி இல்லை இரண்டாம் இடம் என்பதை மறந்து விடக் கூடாது.


Click it and Unblock the Notifications











