ஒத்த செருப்பு தந்த யோகம்... ஆச்சரியமாக அழைத்த ஹாலிவுட் இயக்குனர்... ஆங்கிலப் படத்தில் பார்த்திபன்
Recommended Video
சென்னை: நேரடி ஆங்கில படம் ஒன்றில் நடிக்க போவதாக நடிகரும் இயக்குனருமான ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பார்த்திபன், ஒத்த செருப்பு படத்தை இயக்கி, நடித்திருந்தார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன், சத்யா இசை அமைத்திருந்தனர்.
தனது பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் நிறுவனம் மூலம் ரா.பார்த்திபனே இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

விருதுகள்
கடந்த வருடம் ரிலீஸ் ஆன, இந்தப் புதுமைப் படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. முன்னணி இயக்குனர்கள் பலரும் பார்த்திபனின் வித்தியாசமான இந்த முயற்சியை மனம் திறந்து பாராட்டினர். உலக தரத்தில் இருப்பதாகவும் புகழ்ந்தனர். பல்வேறு திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் விருதுகளைப் பெற்றது.

இந்தியில் ரீமேக்
ஒத்த செருப்பு படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. பார்த்திபன் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் நவாஜூதின் சித்திக் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடப்பதாக பார்த்திபன் கூறியிருந்தார்.

பேச்சுவார்த்தை
அதோடு, ஒத்த செருப்பு படத்தை ஆங்கிலத்தில் எடுத்தால் நீங்கள் கொண்டாடப்படுவீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்தார். அதற்கு பார்த்திபன் கூறும்போது, அதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் நல்ல விஷயம் தெரியவரும் என்று தெரிவித்திருந்தார்.

ஹாலிவுட்டுக்கு
இந்நிலையில், இந்தப் படம் தந்த வாய்ப்பு மூலம் இப்போது ஆங்கில படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் பார்த்திபன். பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை ஹாலிவுட்டுக்கு அழைத்திருப்பதாகவும் இதற்காக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்ல இருப்பதாகவும் பார்த்திபன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

துக்ளக் தர்பார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரா.பார்த்திபனின் இன்றைய தேதியின் வி(சேஷ)சேதி. விஜய் சேதுபதியின் பாதியாக நடிக்கும் 'துக்ளக் தர்பார்', புஷ்கர் காயத்ரி வழங்கும் 'சுழல்' என்ற வெப்சீரிஸ், நடிகை சிம்ரனின் சொந்தப்படம், எழில் இயக்கும் படம், சமீப பிரபல இயக்குனரின் படம் மற்றும் என் 'இரவின் நிழல்' இன்னும் சில!

ஏன் ஆங்கிலம்
இவையன்றி Really its a great pleasure for me to announce that... ஏன் ஏன் Suddenly ஆங்கிலம்? Yeah! இவ்வருட கடைசியில் ஒரு நேரடி ஆங்கிலப் படத்தில் நடிக்கிறேனாக்கும் (OS7 பார்த்த ஹாலிவுட் இயக்குனரின் அழைப்பில் March-ல் L A செல்கிறேன்) மற்ற விவரங்கள் Soon! என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











