தியேட்டருக்கு டிக்கெட் எடுத்து வரலாம்… துப்பாக்கி கொண்டு வரலாமா? நடந்தது என்ன?

ஆந்திரா : ஆந்திரா மாநிலத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்க்க ரசிகர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கியுள்ள திரைப்படம் என்பதால் வானளாவிய எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்துள்ள படம் ஆர் ஆர் ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் என ஏராளமான நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

R.R.R. The person who brought the gun to see the film

ராஜமௌலி ஆர் ஆர் ஆர் படத்தை பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகளுடன் இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். சிறிய கதையை வைத்து அதில் சுதந்திர போராட்ட திரைக்கதை அமைத்து கொடுத்திருக்கிறார். பல காட்சிகளை கொடுத்து ரசிகர்களை திகட்ட திகட்ட ரசிக்க வைத்துள்ளார்.

ஆர் ஆர் ஆர் படம் பார்த்த அனைவரும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரண்டு பேரின் நடிப்பும் வேறலெவலில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆக்ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.இயக்குநர் ராஜமெளலி. அவரின் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாவதால் பாகுபலி படங்களைவிட ஆர்.ஆர்.ஆர் கூடுதல் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

R.R.R. The person who brought the gun to see the film

ஆந்திராவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் திருவிழாப்போல பட்டாசு, கட்டவுட்டுக்கு பால்அபிஷேக் செய்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை காண ரசிகர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்ததால் திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த நபரோ துப்பாக்கியை ஸ்டைலை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

தகவல் அறிந்து திரையரங்கு வந்த போலீசார் அவரை பிடித்து துப்பாக்கி பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செய்தி இணையத்தில் திரையரங்குக்கு டிக்கெட்டுடன் வரலாம்... ஆனால், துப்பாக்கியுடன் வரலாமா என கேட்டு கலாய்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X