மூத்த இயக்குநர்களின் காலில் விழ சொல்லவில்லை.. அவர்களை அவமதிக்காதீர்கள்.. ஆர்.வி.உதயகுமார் பேச்சு!

சென்னை : கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பா. இந்த படத்தை அவரது உதவி இயக்குனர் சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு,சுரேஷ் மேனன், பிளாக் பாண்டி உள்பட பலர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது.

இந்தப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் இன்று நடந்தது, இதில் பேசிய ஆர்வி உதயகுமார், இளம் இயக்குநர்கள் ,மூத்த இயக்குநர்களை அவமதிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

கூகுள் குட்டப்பா

கூகுள் குட்டப்பா

இயக்குநர் சங்கத்தை காப்பாற்றவே இப்படி போராட வேண்டியது உள்ளதே, தமிழ் சினிமாவை காப்பாற்ற இன்னும் என்ன என்ன செய்ய வேண்டுமோ, என்று பேச்சை தொடங்கினார் ஆர்.வி.உதயகுமார். கூகுள் குட்டப்பா மாதிரி ஆட்கள் தமிழ் சினிமாவை காப்பாற்ற வர வேண்டும் என்றார். ஆங்கில திரைப்படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்ட திரைப்படம் இதுவாகும். இதேபோல ஒரு திரைப்படத்தை நான் இயக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை என்றார்.

கே. எஸ்.ரவிக்குமார் மாறவே இல்லை

கே. எஸ்.ரவிக்குமார் மாறவே இல்லை

இயக்குநர் கே. எஸ்.ரவிக்குமார் அவருடைய வளர்ச்சியில் மட்டுமே மாறி இருக்கிறார். அவருடைய குணம்,பண்பு, பெருந்தன்மை, மரியாதை இவை அனைத்தும் அவரிடம் அப்படியே உள்ளது. கே. எஸ்.ரவிக்குமார் இன்று வரை அவருடைய குருநாதரான விக்ரமனுக்கு உரிய மரியாதையை அளித்து வருகிறார்.

கே. எஸ்.ரவிக்குமார் மாறவே இல்லை

கே. எஸ்.ரவிக்குமார் மாறவே இல்லை

இயக்குநர் கே. எஸ்.ரவிக்குமார் அவருடைய வளர்ச்சியில் மட்டுமே மாறி இருக்கிறார். அவருடைய குணம்,பண்பு, பெருந்தன்மை, மரியாதை இவை அனைத்தும் அவரிடம் அப்படியே உள்ளது. கே. எஸ்.ரவிக்குமார் இன்று வரை அவருடைய குருநாதரான விக்ரமனுக்கு உரிய மரியாதையை அளித்து வருகிறார்.

மூத்த இயக்குநர்களுக்கு மரியாதை இல்லை

மூத்த இயக்குநர்களுக்கு மரியாதை இல்லை

ஆனால் இன்றைய சூழலில் இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை. அண்மையில் இளம் இயக்குநர் படைப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தைப் பார்த்துவிட்டு, அவருக்காக காத்திருந்து, பாராட்டை தெரிவித்தபோது, அவர் எளிதாக ஒரே வார்த்தையில் பதிலளித்து கடந்து சென்றுவிட்டார். மூத்த இயக்குநர்களின் காலில் விழுங்கள் என்று சொல்லவில்லை. அவர்களை அவமதிக்காதீர்கள் அந்த பண்பு இருந்தால் தான் நீங்கள் வாழ்க்கையில் உயர்த்த இடத்தை அடைய முடியும் என்று ஆர்.வி.உதயகுமார் பேசினார்.

பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே. செல்வமணி, ஆர். வி உதயகுமார், பேரரசு, கவுரவ் நாராயணன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X