சிண்ட்ரெல்லா படத்தில் ராய் லக்‌ஷ்மியின் கதாபாத்திரம் இதுதான்.. வெளியானது பர்த்டே ஸ்பெஷல் போஸ்டர்!

சென்னை: நடிகை ராய் லக்‌ஷ்மியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் இருந்தே, அவரது ரசிகர்கள் #HBDLakshmiRai என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ராய் லக்‌ஷ்மி நடிப்பில் உருவாகி உள்ள சிண்ட்ரெல்லா படத்தில் இருந்து பிறந்த நாள் பரிசாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லக்‌ஷ்மி, பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Raa Laxmi’s Cinderella movie new poster released!

ஹாரர் ஃபேண்டஸி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் 'துளசி' எனும் கதாபாத்திரத்தில் நடிகை லக்‌ஷ்மி ராய் நடித்து வருவதை படக்குழு தற்போது ரிவீல் செய்திருக்கிறது.

சிண்ட்ரெல்லா கதை என்றாலே ஏழை பெண்ணுக்கு பணக்கார வாழ்வு கிடைப்பதும், அதை பார்த்து பொறாமை படும் உறவினர்கள், அவளை பழிவாங்க நினைப்பதும் தான் கதை. பேய் படமாகவும், ஃபேண்டஸி படமாகவும் உருவாகி உள்ள இந்த சிண்ட்ரெல்லா என்ன செய்யப் போகிறாள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கடந்த ஆண்டு வெளியான நீயா 2 படம் தமிழில் ராய் லக்‌ஷ்மிக்கு நினைத்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு வெளியாகவுள்ள சிண்ட்ரெல்லா படம் ராய் லக்‌ஷ்மிக்கு மீண்டும் ஒரு கம்பேக் படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும், மிருகா என்ற படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து ராய் லக்‌ஷ்மி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X