'ராய் லட்சுமியின் ராக்ஸ்டார் யார் தெரியுமா?
ராய் லட்சுமியை மிஸ் வேர்ல்டு என அழைக்கும் ஜெய்!
சென்னை: நடிகர் ஜெய் தன்னை மிஸ் வேர்ல்டு என அழைப்பார் என ராய் லஷ்மி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் கதாநாயகிகளில் உயரமான ஹீரோயின் ராய் லஷ்மி. இவருடைய நடிப்பில் இப்போது நீயா 2 திரைப்படம் ரிலீசாக உள்ளது.
இத்திரைப்படத்தில், ஜெய், ராய்லஷ்மி, வரலட்சுமி சரத்குமார் கேதரின் தெரசா மற்றும் பலர் நடித்துள்ளனர். பாம்புக் கதையை மையமாக வைத்து ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகியுள்ளது. சுரேஷ் இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து பேசிய ராய் லட்சுமி, நடிகர் ஜெய்யும் ராய்லட்சுமியும் 10 வருடங்களாக நண்பர்கள் எனவும், வாமனன் திரைப்படத்திலிருந்து நட்பு தொடர்வதாகவும் தெரிவித்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், ஜெய்யை ராக்ஸ்டார் என அழைப்பதாகவும், அதற்கு பதிலாக என்னை அவர் மிஸ் வேர்ல்டு என அழைப்பார் எனவும் கூறியுள்ளார்.
வரலட்சுமி குறித்து தெரிவித்துள்ள ராய்லட்சுமி, நீண்ட நாட்களாக பழக்கமானவர் எனவும், கொடைக்கானலில் எங்களைப் பார்த்த படக்குழுவினர் பொதுவாக நடிகைகள் என்றால் சண்டைபோட்டுக்கொள்வார்கள். ஆனால் இவர்கள் அரட்டை அடிக்கிறார்களே என வியந்து உன்னிப்பாக கவனித்தார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோல் சக நடிகைகளுடன் நட்பு பாராட்டுவதன் மூலம் நடிப்பில் உள்ள குறை நிறைகளை பகிர்ந்து முன்னேற முடியுமென அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











