வெற்றி தாகம்: துணிந்து பெரிய ரிஸ்க் எடுக்கும் ராய் லட்சுமி

By Siva

Recommended Video

துணிந்து பெரிய ரிஸ்க் எடுக்கும் ராய் லட்சுமி - வைரல் வீடியோ

சென்னை: வெற்றி பெற வேண்டும் என்று ராய் லட்சுமி துணிந்து ரிஸ்க் எடுத்துள்ளார்.

2005ம் ஆண்டு கோலிவுட் வந்தவர் ராய் லட்சுமி. நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வளர்ந்து வரும் நடிகை பட்டியலிலேயே உள்ளார். அவருக்கு என்று ஒரு பிரேக் கிடைக்கவில்லை.

லட்சுமி ராயாக நடிக்க வந்தவர் தற்போது ராய் லட்சுமியாக வலம் வருகிறார்.

ராய் லட்சுமி

ராய் லட்சுமி

ஸ்ரீகாந்த் நடிக்கும் மிருகா என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ராய் லட்சுமி. இந்த படத்தில் நடிக்க நான் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஒப்புக் கொண்டேன். ஆனால் பிற படங்களை முடிக்க வேண்டி இருந்தது. தெலுங்கு, கன்னட படங்கள் வேறு இருக்கிறது. சின்ட்ரெல்லா படத்தை அடுத்து மிருகா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன் என்கிறார் ராய் லட்சுமி.

கதை

கதை

மிருகா படத்தில் ஸ்ரீகாந்த் ராய் லட்சுமியின் ஜோடி இல்லை. இது வழக்கமான ஹீரோ-ஹீரோயின் கதை இல்லை என்று ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். சவுகார்பேட்டை படத்தை அடுத்து ராய் லட்சுமியும், ஸ்ரீகாந்தும் சேர்ந்து நடிக்கிறார்கள். அவர்கள் சேர்ந்து இருக்கும் புதிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வலம் வருகின்றது.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது போர் அடிக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். என் தவறுகளை திருத்திக் கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன். நீயா 2 பாம்பு படம், சின்ட்ரெல்லா ஹாரர் படம், மிருகா த்ரில்லர் என்று தெரிவித்துள்ளார் ராய் லட்சுமி.

தாய்

தாய்

மிருகா படத்தில் ஒரு விதவையாக அதுவும் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறாராம் ராய் லட்சுமி. இது ஒரு மெச்சூரான கதாபாத்திரம். தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் ஊட்டியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ராய் லட்சுமி கூறியுள்ளார். விதவை தாய் கதாபாத்திரம் ராய் லட்சுமிக்கு கை கொடுக்கட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X