»   »  அந்த நடிகையின் கணவர் வந்தால் பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு வர ரெடி: ராய் லட்சுமி

அந்த நடிகையின் கணவர் வந்தால் பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு வர ரெடி: ராய் லட்சுமி

By Siva
Subscribe to Oneindia Tamil
அந்த நடிகையின் கணவர் வந்தால் பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு வர ரெடி: ராய் லட்சுமி- வீடியோ

சென்னை: அந்த நடிகையின் கணவர் வந்தால் தான் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தயார் என்று ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் வீடு சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் நடிகை ராய் லட்சுமி கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

ராய் லட்சுமி

தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான தகவலை அறிந்து ராய் லட்சுமி அதிருப்தி அடைந்தார். ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் தமிழ் ஏன் என்னை பற்றி தவறான செய்தியை பரப்புகிறது? ஏன்? ஏன்? ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கரண் சிங் குரோவர்

உங்களை பிக் பாஸ் வீட்டில் பார்க்க விரும்புகிறோம் என்று நடிகை பிபாஷா பாசுவின் கணவரும், நடிகருமான கரண் சிங் குரோவர் ட்வீட்டினார். அதை பார்த்த ராய் லட்சுமி நீங்கள் என் பார்ட்னராக வந்தால் மட்டுமே கலந்து கொள்வேன் என்று பதில் அளித்துள்ளார்.

தீ

உங்களின் மொத்த குழுவையும் பிக் பாஸ் வீட்டில் பார்க்க விரும்புகிறேன் என்றவரிடம் வீடு பத்திக்கும் என்று பதில் அளித்துள்ளார் ராய் லட்சுமி.

வெற்றி

ராய் லட்சுமி மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் ஒருவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி

கஸ்தூரி

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் என்று வலம் வந்த பட்டியலை பார்த்து தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று முதலில் நடிகை கஸ்தூரி தெரிவித்தார். தற்போது ராய் லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Actress Raai Laxmi has tweeted that, she will participate in Bigg Boss show only if Bollywood actor Karan Singh Grover comes as her partner.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more