சுருள் சுருளா சுருட்டை முடி… புது ஹேர் ஸ்டைலில் கலக்கும் ராய் லட்சுமி!
சென்னை : முன்னணி நடிகை ராய் லட்சுமி சின்ட்ரெல்லா, கேங்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ஒரு நடிகையாக இருக்கிறார் ராய் லட்சுமி.
புது ஹேர் ஸ்டைலில் புது போலிவுடன் ரசிகர்களுக்கு கலக்கலாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அறிமுகம்
ஆர்.வி உதயக்குமார் இயக்கத்தில் உருவான கற்க கசடற திரைப்படத்தில் முதன் முதலாக தனது நடிப்பு அனுபவத்தை கொடுத்தார். இப்படம் இவர எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை என்பதால் தெலுங்கு,மலையாள திரைப்படங்களில் தனது கவனத்தை செலுத்தினார்.

பல படங்களில்
ஜெயம் ரவியுடன் தாம்தூம் திரைப்படத்தில் நடித்தார் இப்படம் இவருக்கு ஓரளவு பெயரை பெற்றுத்தந்தது இதையடுத்து, நான் அவன் இல்லை, மங்காத்தா, பெண் சிங்கம், காஞ்சனா, வனயுத்தம், ஒன்பது குரு போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் இவரது திறமையை நிரூபிக்கும்படியான திரைப்படங்களில் நடிக்காதது இவருக்கு ஒரு கவலையாகவே உள்ளது.
Recommended Video

ஆக்டிவாக
சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் , வொர்க் அவுட் வீடியோ, விதவிதமான போட்டோஷூட் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். இதனால் இணையத்தில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

புது ஹேர் ஸ்டைல்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், புதுவிதமான ஹேர் ஸ்டைல் செய்துகொள்கிறார். மேலும் ஊரடங்கிலிருந்து விடுதலை, என்னை சீர்படுத்தும் நாட்களை மறந்து விட்டேன் . தற்போது திரும்பி வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த புது சிகை அலங்காரத்தில் நான் எப்படி இருக்கேன் என்று தனது ரசிகர்களை கேட்டுள்ளார்
திகில் திரைப்படம்
சின்ட்ரெல்லா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பெண்களை மையமாகக்கொண்ட ஒரு திகில் திரைப்படமாகும். வினோ வெங்கடேஷ் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராகிறார். இந்த படத்தில் சாக்ஷி அகர்வாலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











