ஜூலி 2 அந்த மாதிரி படம்னு நினைச்சு ஏமாந்துட்டாங்க - ராய் லட்சுமி

ஜூலி 2 படம் தோல்வியடைந்தது ஏன் என்பது பற்றி மனம் திறந்துள்ளார் படத்தின் நாயகி ராய் லட்சுமி.

By Mayura Akilan

மும்பை: நான் நடித்த ஜூலி 2 படத்தை அந்த மாதிரி படம் என்று நினைத்து வந்து ஆபாச காட்சிகள் இல்லாமல் ரசிகர்கள் ஏமாந்து விட்டனர் என்று நாயகி ராய் லட்சுமி கூறியுள்ளார். படம் தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என்றும் ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

தீபக் ஷிவ்தாசனி இயக்கத்தில் ராய் லட்சுமி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ஜூலி 2. ராய் லட்சுமியின் முதல் ஹிந்திப் படமான இது, அவருக்கு 50வது படமும் கூட. இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் நடிகை நக்மாவின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

படுகவர்ச்சியாக போஸ்டரில் போஸ் கொடுத்திருந்தார் ராய் லட்சுமி. ட்ரைலரிலும் புரமோசன் நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சிக்கன்னியாகவே தோன்றினார் ராய்லட்சுமி.

ப்ளாப் ஆன ஜூலி 2

ப்ளாப் ஆன ஜூலி 2

இந்த படத்தின் ப்ரோமோஷன் போது ஜூலி 2 இந்திய தமிழ் நடிகையின் திரை பயணம் என்றும் இந்த நடிகையின் கதையை தான் திரைப்படமாக எடுத்துள்ளார்கள் என்றும் கூறினார் ராய் லட்சுமி. இந்த படம் பாக்ஸ் ஆபீசில் மிக மோசமான வரவேற்பை பெற்றுள்ளது.
ரிலீசான இரண்டு நாட்களில் இப்படம் ரூ.1 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

படு ப்ளாப் ஆன ஜூலி

படு ப்ளாப் ஆன ஜூலி

இந்த படத்தின் இந்த தோல்விக்கு காரணம் படத்தின் கதை தான் என்று கூறி வருகிறார்கள். இனி வரும் நாட்களில் இப்படம் தோல்வி படம் என அறிவிக்கப்பட உள்ளதாம். பிரிண்டிங், விளம்பரம் ஆகியவற்றையும் சேர்த்து ஜூலி 2 படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய 30 கோடி. ஆனால் வசூலித்துள்ள வெறம் ஒரு கோடி மட்டுமே.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

ஹிந்தி மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் தெலுங்கிலும் கூட இந்தப் படம் ரிலீஸானது. ஆனால், பெரும் தோல்வி அடைந்தது. ஜூலி 2 படத்தின் போஸ்டர்ஸ், டீஸர், டிரெய்லரைப் பார்த்தவர்கள், இந்தப் படத்தில் நிறைய ஆபாசக் காட்சிகள் இருக்கும் என நினைத்தார்கள்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ஜூலி 2 படத்தில் அப்படி எதுவும் பெரிதாக இல்லை. என்னுடைய படத்தை, ஆபாச படமாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்துவிட்டனர். அவர்கள் எதிர்பார்த்தது இல்லாததுதான் தோல்விக்கு காரணமென நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் ராய் லட்சுமி.

கதையே இல்லையே

கதையே இல்லையே

இது என் மீதான தனிப்பட்ட பழி வாங்கும் செயல் என்று கூறியுள்ளார் ராய் லட்சுமி. படத்தில் கதைதான் இல்லை... சதையாவது இருந்திருக்கலாம்... அப்புறம் எப்படி படம் பார்ப்பார்கள் என்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X