எல்கேஜி பாப்பா கூட இந்த டிரஸ் போடாதே..ராய் லட்சுமியை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை : நடிகை ராய் லட்சுமியின் போட்டோவுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வரும் நிலையில், அவரை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மாடல் அழகியான ராய் லட்சுமி சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு விளம்பர படங்களில் நடித்துள்ளார். புரூ காஃபி விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்துள்ளார்.

இந்த விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்தே இவர் சினிமாவில் நுழைந்தார்.

ராய்லட்சுமி

ராய்லட்சுமி

ஆர்.வி உதயக்குமார் இயக்கத்தில் உருவான கற்க கசடற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார் ராய் லட்சுமி. இத்திரைப்படம் சரியான வரவேற்பை பெறாமல் தோல்வியைத் தழுவியது. கற்க கசடற படம் தோல்வியைத் தழுவியதால் பட வாய்ப்புக்காக டோலிவுட்டுக்கு சென்றார்.

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கில் அறிமுகம்

தெலுங்கில் இவர், காஞ்சனா கேபிள் டிவி என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படமும் சொதப்பிக்கொண்டு போகவே எப்படியாவது தெலுங்கில் ஒரு நல்ல கதாபாத்திரத்திற்காக அங்கேயே டேராவை போட்டார். மலையாளம், கன்னடம் என ஒரு சில படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு கேரக்டர் அமையவில்லை.

அடுத்தடுத்த படங்களில்

அடுத்தடுத்த படங்களில்

சரி கிடைத்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என ஜெயம் ரவி, கங்கணா ரனாவத் நடித்த தாம்தூம் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு ஓரளவுக்கு பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தை அடுத்து முத்திரை, வாமனன், நான் அவன் இல்லை2, ஒரு காதலன் ஒரு காதலி என தமிழில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமானார்.

கவர்ச்சி குயின்

கவர்ச்சி குயின்

திறமை இருந்தும் சரியாக கதைகளை தேர்வு செய்யாததால் அவரால் சினிமாவில் உயரத்தை தொட முடியவில்லை. பட வாய்ப்பை இழந்த நடிகைகளில் கடைசி ஆயுதமான கவர்ச்சியை கையில் எடுத்துள்ள ராய் லட்சுமி, பல திரைப்படங்களில் கவர்ச்சி குயினாக வலம் வர ஆரம்பித்தார். இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைப்படத்தில் கவர்ச்சி பதுமையாக படம் முழுக்க வலம் வந்து இருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.

எல்கேஜி பாப்பா

எல்கேஜி பாப்பா

ராய் லட்சுமியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனைத் தாண்டி உள்ளது. சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி விதவிதமான புகைப்படங்களை அப்லோடு செய்து வருகிறார். தற்போது இவர், பளபளக்கும் தனது அழகான தொடை தெரியும் படி ஒரு வித்தியாசமான போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் எல்கேஜி பாப்பா கூட இந்த டிரஸ் போடாதே என்று ராய் லட்சுமியை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X