க்யூட் போட்டோவிலும் இவ்வளவு ஹாட்டா.. பலிக்குமா ராய் லக்ஷ்மியின் பகல் கனவு?
Recommended Video
சென்னை: துபாய் பீச்களில் பிகினியில் சுற்றித்திரிந்த புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த ராய் லக்ஷ்மி, தற்போது க்யூட்டான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கோலிவுட்டில் தனக்கான சரியான இடம் கிடைக்கவில்லை என்று, பாலிவுட் சென்ற ராய் லக்ஷ்மிக்கு, அங்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
அவர் நடிப்பில் இந்தியில் வெளியான ஜூலி 2 படமும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. மீண்டும் தமிழுக்கு வந்த ராய் லக்ஷ்மி, நடிப்பில் வெளியான நீயா 2வும் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், பேய் படமான சிண்ட்ரெல்லா படத்தின் ரிலீசுக்காக வெயிட் செய்து வரும் ராய் லக்ஷ்மி மாடலிங்கில் அதீத கவனத்தை செலுத்தி வருகிறார்.
பீச்.. பிகினி
அண்மையில் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்த ராய் லக்ஷ்மி, பாலிவுட் நடிகைகள் மற்றும் தனது தோழிகளான சோனாலி ஷெய்கல் மற்றும் சாமா சிக்கந்தருடன் பீச்சில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார்.
பகல் கனவு
இந்நிலையில், தற்போது கருப்பு நிற டாப்ஸில் க்யூட்டாகவும் கொஞ்சம் ஹாட்டாகவும் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, கூடவே 'டே ட்ரீமிங்' என தான் பகல் கனவு காண்பதாக பதிவிட்டுள்ளார்.
ஹாட்டீ
ராய் லக்ஷ்மி என்னதான் மூடி முறைத்து க்யூட்டாக புகைப்படம் போட்டாலும், அவரது ரசிகர்கள், அவரை ஹாட்டாகத்தான் காண ஆசைப்படுகின்றனர். ராய் லக்ஷ்மியின் க்யூட் புகைப்படத்திற்கு கீழே Hottie என அவரது பிகினி புகைப்படத்தை இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
ராய் லக்ஷ்மியின் க்யூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அழகாக இருக்கிறது என்றும் க்யூட்டாக இருக்கிறது என்றும் கமென்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ரசிகர் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என கிண்டலாக கமென்ட் செய்துள்ளார்.
மெழுகு சிலை
ராய் லக்ஷ்மியின் க்யூட் புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன், நீங்க மெழுகு சிலை மாதிரி இருக்கீங்க எனக் கூறியுள்ளார். சார் நீங்க வர்ணிக்கிறீங்களா இல்லை கழுவி ஊத்துறீங்களா ஒன்னுமே புரியலையே..
உங்க பகல் கனவு பலிக்கும்
குயின் ராய் லக்ஷ்மி, உங்க கனவு நிச்சயம் பலிக்கும். உங்க கனவை நீங்க நிச்சயம் நிஜமாக்குவீங்கன்னு இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











