இது என்ன ஹேர் ஸ்டைல்.. முன்னால் முழுக்க நரைத்த முடி.. ராய் லக்ஷ்மியின் போட்டோவால் ஷாக்கான ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ராய் லக்ஷ்மியின் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பதறியுள்ளனர்.
நடிகை ராய் லக்ஷ்மி நடிகர் விக்ராந்துடன் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சை தொடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ஜெயம் ரவி, அஜித், லாரன்ஸ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக மிருகா
பல மொழிகளில் பிஸி
ராய் லக்ஷ்மி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் மிருகா படம் வெளியானது. தற்போது கன்னடத்தில ஜான்சி ஐபிஎஸ், தெலுங்கில் ஆனந்த பைரவி, மலையாளத்தில் ஒட்டக்கொம்பன், தமிழில் சிண்ட்ரெல்லா மற்றும் கேங்ஸ்டர் 21 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் பிகினி
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி, அடிக்கடி போட்டோ ஷூட்டுக்கள் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். பெரும்பாலும் பிகினியில் போட்டோ ஷூட் நடத்தி மிரள வைத்து வருகிறார்.

டீப் ஓபன் டாப்பில்..
பிகினியில் எத்தனை மாடல்கள் உள்ளதோ அத்தனை மாடல்களையும் போட்டு திணறடித்து வருகிறார். அண்மையில் கறுப்பு நிற டீப் ஓபன் டாப்பில் அவர் நடத்திய போட்டோ ஷூட் பெரும் வைரலானது.

வெள்ளை முடியில்..
இந்நிலையில் பாம்பு தோல் போன்ற கவுனை அணிந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி. அதுமட்டுமின்றி வித்தியாசமான ஹேர் ஸ்டைலில், தலையின் முன்பகுதியில் வெள்ளை முடி படர்ந்திருக்க வேற மாதிரி போஸ் கொடுத்துள்ளார் ராய் லக்ஷ்மி.

நரைத்து விட்டது..
இதில் அவரது உடையும் வித்தியாசமாக உள்ளது. இந்த போட்டோவை பார்த்து பலரும் ஸ்டன்னிங் க்யூட் என வர்ணித்துள்ளனர். இருந்த போதும் சில நெட்டிசன்கள், என்ன முடியெல்லாம் நரைத்து போய்விட்டது என அதிர்ச்சியாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











