ரொம்ப கஷ்டப்பட்டேன்: ஊதா கலரு பிகினி போட்டோ வெளியிட்ட ராய் லட்சுமி

By Siva

Recommended Video

Rai Laxmi Bigini: நடிகை ராய் லட்சுமி பிகினி போட்டோ

சென்னை: ராய் லட்சுமி தனது பிகினி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

கற்க கசடற படம் மூலம் நடிகையானவர் ராய் லட்சுமி. நடிக்க வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னும் அவரால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை.

Raai Laxmi worked hard for bikini body

இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறார். பாலிவுட் படமான ஜூலி 2-ல் நடித்த பிறகு ராய் லட்சுமி உடலை சிக்கென்று வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். ஜூலி 2 படத்தில் பிகினி அணிந்து கவர்ச்சியாக நடிக்க வசதியாக அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்தார்.

பிகினி அணிந்து நடிக்க உடல் எடையை குறைப்பது பாலிவுட்டில் சாதாரண விஷயம். அதை தான் ராய் லட்சுமியும் செய்தார். அந்த படம் ஓடாவிட்டாலும் உடல்நலனில் அக்கறை செலுத்துவதை அவர் நிறுத்தவில்லை.

இந்நிலையில் அவர் ஊதா கலரு பிகினி அணிந்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிகினி பாடியை பெற ரொம்ப கஷ்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். புது மனுஷி போன்று உணர்கிறேன். ஃபிட்டாக இருப்பது பிடித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆடை படத்திற்காக உடல் எடையை குறைத்து படுஃபிட்டாக மாறிய பிறகு தனக்கு தனி தைரியமும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக அமலா பால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராய் லட்சுமியும் அதையே கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் லைட்டா தொப்பை வைத்து பூசினாற் போன்று இருந்த ராய் லட்சுமி தற்போது ஃபிட்டாக மாறியதை பார்த்த சில ரசிகர்கள் அவரின் பழைய புகைப்படத்தை வெளியிட்டு எது அழகு என்று கேட்டுள்ளனர்.

பிற நடிகைகள் பிகினி புகைப்படம் வெளியிட்டால் வெட்கம் இல்லையா, மானம் இல்லையா என்று நெட்டிசன்கள் கேவலமாக கேட்கிறார்கள். ஆனால் ராய் லட்சுமி பிகினி புகைப்படம் வெளியிட்டால் மட்டும் செம ஹாட், சூப்பர், அழகு என்று பாராட்டுகிறார்கள்.

ராய் லட்சுமி தற்போது சின்ட்ரெல்லா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் நடித்த ஜான்சி கன்னட படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X