twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜ் பாஷா ராஷ்ட்ர பாஷை இல்லை சார்.. அஜய் தேவ்கானுக்கு பாடகி சின்மயி சூப்பரான பதிலடி!

    |

    சென்னை: இந்தி நமது தேசிய மொழி என கருத்து தெரிவித்த அஜய் தேவ்கனுக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.

    கன்னட திரைப்பட விழாவில் விக்ராந்த் ரோணா பட நடிகர் கிச்சா சுதீப் "இந்தி தேசிய மொழி" இல்லை என பேசியிருந்தார்.

    அவரை டேக் செய்து, "இந்தி தேசிய மொழி இல்லை என்றால், உங்கள் தாய் மொழி படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுறீங்க" எனக் கேட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    5 மணி நேரத்தில் காத்துவாக்குல இன்டர்நெட்டில் லீக்கான KRK...இதெல்லாம் கேட்க மாட்டீங்களா? 5 மணி நேரத்தில் காத்துவாக்குல இன்டர்நெட்டில் லீக்கான KRK...இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?

    கிச்சா சுதீப் பதில்

    கிச்சா சுதீப் பதில்

    நான் அந்த இடத்தில் வேறு ஒரு தொனியில் பேசியிருந்தேன் அஜய் தேவ்கன் சார், உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை இதை இங்கேயே முடித்துக் கொள்வோமே என ட்வீட் போட்டிருந்தார். மேலும், அஜய் தேவ்கனுக்கு உரைக்கும் விதமாக நீங்க இந்தியில் போட்ட ட்வீட் எனக்கு புரிகிறது. இதே நான் கன்னடத்தில் பதில் அளித்திருந்தால் உங்கள் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்பது போல போட்ட கமெண்ட் தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    பான் மசாலா ஸ்டார்

    பான் மசாலா ஸ்டார்

    நடிகர் அஜய் தேவ்கனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தென்னிந்திய நடிகர்கள் பாக்ஸ் ஆபிஸ் ஸ்டார்கள் என்றும் பாலிவுட் நடிகர்கள் எல்லாம் பான் மசாலா ஸ்டார்கள் என வச்சி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும், அஜய் தேவ்கனுக்கு எதிரான மீம்களையும் போட்டு டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

    பிரபலங்கள் கண்டனம்

    பிரபலங்கள் கண்டனம்

    அஜய் தேவ்கன் போட்ட ட்வீட்டை பார்த்து விட்டு பாலிவுட்டில் பலரும் அமைதியாக உள்ளனர். ஆனால், தென்னிந்தியாவில் அரசியல் தலைவர்கள் முதல் நடிகர்கள் வரை என பலரும் அஜய் தேவ்கனை கண்டித்து வருகின்ற்னார். நடிகை கஸ்தூரி, நடிகை ரம்யா, இயக்குநர் ராம் கோபால் வர்மா உள்ளிட்ட பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

    ராஜ்ய பாஷா இல்லை

    ராஜ்ய பாஷா இல்லை

    இந்நிலையில், பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜ் பாஷா ராஷ்ட்ர பாஷை இல்லை சார்.. ஏன் இந்த இந்தி தேசிய மொழி என்கிற பஞ்சாயத்து அடிக்கடி எழுகிறது. யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம் என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

    English summary
    Singer Chinmayi Tweeted, “Raaj Bhaasha. Raashtra Bhaasha Nahi, Sir. Why is this ‘Hindi is our National Language’ being repeated so much? Everyone will learn a language if needed no or if they like / want to be a polyglot. No?” and advised Ajay Devgn.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X