Filmfare: 8 ஃபிலிம் ஃபேர் விருதுகளை தட்டித்தூக்கிய அமரன்.. மார்தட்டிக் கொள்ளும் கமல்ஹாசன்
சென்னை: 70 வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படமான அமரன் படம் 8 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மிகவும் பெருமை மிக்க வீடியோவை வெளியிட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
70 வது தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமரன் படமானது, சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த மியூசிக் ஆல்பம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த பின்னணி பாடகி மற்றும் சிறந்த பின்னணி பாடகர் என மொத்தம் 8 விருதுகளை வென்றுள்ளது.

இது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமானது தனது சமூக வலைதளப் பக்கத்தில், வெளியிட்டுள்ள வீடியோவில், 8 விருதுகளை அமரன் படம் வென்றது மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருப்பதாக குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளது. குறிப்பாக விருது வென்ற படக்குழுவினர் பெயரைக் குறிப்பிட்டு அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் படத்தின் சில காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
அமரன்: கடந்த 2024ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான அமரன் படம் வெளியான காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்பதால், படம் பார்த்த பலரும் மிகவும் எமோஷனல் கனெக்ட் ஆனார்கள். இது மட்டும் இல்லாமல் படம் வசூலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவகார்த்திகேயனின் சினிமா கெரியரில் இப்போதைக்கு அமரன் படம் தான் அதிக வசூலித்த படமாக உள்ளது.

பாராட்டு: அதேபோல், ரசிகர்கள் சிவகார்த்திகேயன் தொடங்கி, சாய் பல்லவி என இருவரது நடிப்பையும் பாராட்டினர். படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது ஜிவி பிரகாஷ்குமாரின் பின்னணி இசை மற்றும் பாடல்களைக் கூறலாம். இப்படி இருக்கையில் படம் இந்திய ராணுவத்தால் கொண்டாடப்பட்ட படமாக மாறியது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்தை மிகவும் சிறப்பாக இயக்கி உள்ளார் என்று எட்டுத்திக்கு இருந்து எல்லாம் பாராட்டுகள் குவிந்தது. இப்படி இருக்கையில் இந்த படத்திற்கு 8 ஃபிலிம் ஃபேர் விருதுகள் கிடைத்துள்ளது என்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அதேபோல் ரசிகர்கள் மொத்த படக்குழுவினரையும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications