சிம்பு படத்துக்காக இன்னும் எத்தனை வருஷம் அஸ்வத் மாரிமுத்து வெயிட் பண்ணனும்?.. வேற ஆஃபரும் வருதாம்?

சென்னை: நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலம் குறும்பட இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து கடந்த 2020ம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ஓ மை கடவுளே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்த அவர், அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கிய டிராகன் படத்தை இந்த ஆண்டு வெளியிட்டார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் 37 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான டிராகன் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கெளதம் மேனன், கே.எஸ். ரவிக்குமார், இவானா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

Raajkamal production had talks with Ashwath Marimuthu for his next movie buzz trending

இளைஞர்களை வெகுவாக கவர்ந்து 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்து அந்த படம் மாஸ் காட்டியது. இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படங்களில் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்துக்கு அடுத்தபடியாக டிராகன் படம் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து சிம்பு படம்: டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் தயாரிப்பில் சிம்புவை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு அஸ்வத் மாரிமுத்துவுக்கு கிடைத்துள்ளது. மற்ற இயக்குநர்கள் போல ரொம்பவே பிசியாக இவர் படங்களை பண்ணுவதில்லை. சிம்புவின் 51வது படத்தை தான் இயக்கப் போகிறார். நடிகர் சிம்பு இன்னமும் தனது 49வது படத்தையே ஆரம்பிக்காத நிலையில், இன்னும் சில ஆண்டுகள் அஸ்வத் மாரிமுத்து காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

லேட்டாகும் சிம்பு படம்: ஏற்கனவே நடிகர் சிம்புவின் 48வது படமாக அறிவிக்கப்பட்ட படம் தற்போது சிம்பு 50 என மாறியுள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிவிட்டு தனது அடுத்த படத்தை இயக்க முடியாமல் இயக்குநர் தேசிங் பெரியசாமி பல வருடங்களாக காத்திருக்கிறார். பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு 49 படம் உருவாகவுள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பும் மேலும், 2 மாதங்கள் தாமதமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிராகன் வெற்றியை வீணடிக்கக்கூடாது: ஓ மை கடவுளே படத்தை விட டிராகன் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஆனால், சிம்பு படத்தை இயக்குவதற்காக அஸ்வத் மாரிமுத்து இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கக்கூடாது என்றும் அடுத்து தேசிங் பெரியசாமிக்கு ஏற்பட்ட நிலைமை உண்டாகவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர். சிம்பு 2 படங்களை முடித்துவிட்டு வருவதற்குள் உடனடியாக இன்னொரு படத்தையும் அஸ்வத் மாரிமுத்து இயக்க வேண்டும் என ரசிகர்களும் விருப்பம் தெரிவித்து வருவதாக கூறுகின்றனர்.

ராஜ்கமல் நிறுவனம் பேச்சுவார்த்தை: சிம்புவை வைத்து அஸ்வத் மாரிமுத்து படம் இயக்கும் வரை காத்திருக்க வேண்டிய சூழலில் அதற்கு நடுவே ராஜ்கமல் நிறுவனமும் அஸ்வத் மாரிமுத்துவை அணுகி ஒரு படம் பண்ணலாமா என்கிற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திறமையான நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு தொடர்ந்து ராஜ்கமல் நிறுவனமும் பட வாய்ப்புகளை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அஸ்வத் மாரிமுத்து இந்த ஆஃபரை ஏற்பாரா அல்லது சிம்பு படம் எடுக்கும் வரை பொறுமையாக காத்திருப்பாரா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X