Don't Miss!
- News
"முக்கோண இடி".. வீசும் எடப்பாடி புயல்.. சுழட்டியடிக்கும் சூறாவளி திமுக.. பாஜக டோட்டலா சேஞ்ச் ஆகுதே?
- Sports
"அதை செஞ்சிருங்க; இல்லைனா பிரச்சினை" கேப்டன்சி பிரச்சினை.. ரோகித்திற்கு தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை
- Lifestyle
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- Automobiles
12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
- Technology
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாதது ஏன்..? 3 முக்கிய காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
ராங்கி முதல் டிரைவர் ஜமுனா வரை..படத்தின் முதல் நாள் வசூல்..எதுவும் சொல்லும் அளவுக்கு இல்லையே!
சென்னை : ராங்கி, டிரைவர் ஜமுனா, ஓ மை கோஸ்ட், செம்பி என நேற்று நான்கு திரைப்படங்கள் வெளியாகின. இதில் எந்தெந்த படங்கள் எவ்வளவு வசூல் செய்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதற்கு முன்பாக இவர் நடித்த பூமிகா, சுழல் ஆகியவை இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்துள்ளது. தற்போது அதே பாணியை கையில் எடுத்து இயக்குநர் கின்ஸ்லின் இயக்கத்தில் உருவாகி உள்ள டிரைவர் ஜமுனா படத்தில் நடித்துள்ளார்.
நேற்று திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 1.2 கோடியை வசூலித்துள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், இப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Raangi
Review:
சோலோ
ஹீரோயினாக
அசத்தினாரா
த்ரிஷா?
ராங்கி
விமர்சனம்
இதோ!

ஓ மை கோஸ்ட்
சிந்தனை செய் என்ற திரைப்படத்தை இயக்கிய யுவன், இந்த ஓ மை கோஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். இதில் பாலிவுட் நடிகை சன்னி லியோனி, நகைச்சுவை நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நேற்று திரையரங்கில் வெளியான ஓ மை கோஸ்ட் திரைப்படம் தமிழ் நாட்டில் ஒரு கோடி வசூலையும், உலகம் முழுவதும் 1.2 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

த்ரிஷாவின் ராங்கி
இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ராங்கி. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை த்ரிஷா டூப்பே இல்லாமல் கலக்கி உள்ளார். ஹீரோக்களுக்கு இணையாக மிகப்பெரிய அளவில் த்ரிஷாவுக்கு கட் அவுட் வைத்து காலை 7 மணிக்கு சிறப்புக்காட்சியும் திரையிடப்பட்டது.

முதல் நாள் வசூல்
த்ரிஷா நடித்த ராங்கியின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் கலேக்ஷன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில் மோசமான இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட்டை படத்தைவிட ராங்கி படத்திற்கு குறைந்த ஓப்பனிங்கே கிடைத்துள்ளது. ராங்கி படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தமிழகத்தில் மட்டும் 2 கோடி ரூபாயாகவும், உலகம் முழுவதும் 3 கோடியாகவும் உள்ளது.

செம்பி நல்ல ஓபனிங்
பிரபு சாலமன் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் செம்பி. இதில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர் ரவீந்திரன், அஜ்மல் கான், ரியா ஆகியோர் தயாரித்துள்ளனர். 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம் தமிழகத்தில் 200 திரையரங்குகளில் வெளியானது. செம்பி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தமிழகத்தில் 1.2 கோடியாகவும், உலகம் முழுவதும் 1.3 கோடியாகவும் உள்ளது. ராங்கி, டிரைவர் ஜமுனா விட கோவை சரளா நடித்த செம்பி படத்திற்கே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
-
ஏகே62 படத்துலயும் செம ஹேண்ட்ஸம் ஆன அஜித் லுக் லோடிங்.. இப்பவே மனுஷன் எப்படி இருக்காரு பாருங்க!
-
முரட்டுக்காளை ரயில் ஃபைட்டை மறக்க முடியாது.. ஜூடோ ரத்தினத்துக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த் பேட்டி
-
இறுதிக்கட்ட பரபரப்பில் வெற்றிமாறனின் விடுதலை... ஸ்பாட்டில் இருந்து விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்