நெட்பிளிக்ஸின் ’டார்க்’.. விரைவில் 3ம் பாகம்.. வெறித்தனமாக வெயிட் செய்யும் ’அருவா’நாயகி!

சென்னை: நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாகவுள்ள 'டார்க்' சீசன் 3 ரிலீசுக்காக 'அருவா' பட நாயகி வெயிட்டிங்காம்.

ஸ்பானிஷ் வெப்சீரிஸான மணிஹெய்ஸ்ட்டின் 4ம் பாகம் கடந்த ஏப்ரல் 3ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியானது.

அந்த வெப்சீரிஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தற்போது, அடுத்ததாக ஜெர்மன் வெப்சீரிஸான 'டார்க்' மூன்றாம் பாகத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

டிரெண்டிங்

டிரெண்டிங்

டார்க் வெப்சீரிஸின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், #DarkNetflix என்ற ஹாஷ்டேக்கை உலகம் முழுவதும் அதன் ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். அடுத்த மாதம் ஜூன் 27ம் தேதி டார்க் வெப்சீரிஸின் 3வது பாகம் வெளியாகப் போகும் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

ஒரே குழப்பம்

ஒரே குழப்பம்

பாரன் போ ஒடார் மற்றும் ஜாண்ட்ஜே ஃபிரைஸ் இணைந்து தயாரித்த இந்த டார்க் வெப்சீரிஸில் அமானுஷ்யம், டைம் டிராவல் மற்றும் உறவுகள் என பல விசித்திரமான கதைக்களம் அமைக்கப்பட்டு ரசிகர்களை குழப்பி இருக்கும். இந்த வெப்சீரிஸின் கதையை தெளிவாக யாராலும் சொல்ல முடியாது என்றும், வெப்சீரிஸில் வரும் கதாபாத்திரங்களின் உறவுமுறைகளை நினைவில் வைத்துக் கொள்வது கணக்கு ஃபார்முலாவை விட மோசமானது என மீம்ஸ்கள் பறக்கின்றன.

வைரல் மீம்கள்

வைரல் மீம்கள்

2017ம் ஆண்டு நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பான ஜெர்மனி வெப் தொடரான டார்க் வெப் தொடருக்கு உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இரண்டாம் 2019ம் ஆண்டிலும், மூன்றாம் பாகம் அடுத்த மாதம் 27ம் தேதியும் ரிலீசாகிறது. இந்த வெப்சீரிஸின் கதையை விளக்க முயற்சிப்பதாகவும், முடியாமல் திணறுவதாகவும் பல வித மீம்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

Money Heist | Tamil Cast | Netflix | Series | Review | The Professor
அருவா நாயகி

அருவா நாயகி

மணி ஹெய்ஸ்ட் வெப்சீரிஸுக்கு மாஸ்டர் பட வசனகர்த்தா ரத்னகுமார் எல்லாம் ஆவலோடு காத்திருப்பதாக அறிவித்த நிலையில், தற்போது இந்த புரியாத மாய புதிர் டார்க் வெப்சீரிஸின் மூன்றாம் பாக ரிலீசுக்காக மரண வெயிட்டிங் செய்வதாக ‘அருவா' பட நாயகி ராஷி கன்னா டிவீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X