லாக்டவுன்.. மற்ற நடிகைகள் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட.. ஆசையாகத் தமிழ்க் கற்கும் இந்த ஹீரோயின்!
சென்னை: இந்த லாக்டவுன் நேரத்தில் தமிழ் மொழியை கற்றுவருவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியில் ஜான் ஆப்ரஹாமின் மெட்ராஸ் கபே என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர், ராஷிகண்ணா.
பின்னர் தெலுங்குக்கு வந்த அவர், அங்கு முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.

அடங்கமறு
கடைசியாக விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நயன்தாரா, விஜய்சேதுபதி அதர்வா, நடித்த இமைக்காக நொடிகள் மூலம் அறிமுகமானார். பிறகு, ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார்.

கற்கிறார்கள்
இப்போது சித்தார்த்துடன் சைத்தான் கா பட்சா என்ற படத்தில் நடித்துவருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் வில்லன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த லாக்டவுன் நேரத்தில் ஒவ்வொரு நடிகைகளும் ஒவ்வொன்றைக் கற்றுவருகிறார்கள். சிலர் ஆன்லைனில் சினிமா தொடர்பான படப்பிடிப்புகளை படித்து வருகின்றனர். மேலும் சிலர் வேறு சில டெக்னிக்கல் விஷயங்களை கற்றுவருகிறார்கள்.

2 விஷயங்கள்
சில நடிகைகள் தாங்கள் வீட்டில் இருந்தபடி, ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராஷிகண்ணா, இந்த குவாரைன்டைன் காலத்தில் இரண்டு விஷயங்களை கற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். அதில் ஒன்று கிதார். ஆன்லைன் மூலம் கிதார் வாசிப்பதைக் கற்று வருகிறார். இந்த லாக்டவுன் முடிவதற்குள் அதை நன்றாக கற்றுவிடுவார் என்று நம்புகிறார்.

தமிழ்க் கற்கிறார்
மற்றொன்று, தமிழ் மொழியை கற்று வருகிறாராம். தமிழில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் தமிழ் கற்க ஆர்வம் காட்டுவதாகவும் இந்த நேரத்தைப் பயன்படுத்தி அதைக் கற்று வருவதாகவும் இப்போது ஓரளவு பேசுவதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா. இவர் டெல்லியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











