ஏன், எதுக்கு? விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அதிதி ராவ்.. இணைந்தார் வேறு ஹீரோயின்!
சென்னை: நடிகை அதிதி ராவ் ஹைதாரி, விஜய் சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகியதை அடுத்து வேறு ஹீரோயின் இணைந்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி, நடிக்கும் படம் 'துக்ளக் தர்பார்'. இதை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி வருகிறார்.
லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஜனவரி மாதம் தொடங்கியது.

அதிதி ராவ் ஹைதாரி
கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக அதிதி ராவ் ஹைதாரி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இவர், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், மிஷ்கினின் சைக்கோ உள்பட சில படங்களில் நடித்தவர்.

திடீரென விலகல்
தற்போது, லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, துக்ளக் தர்பார்
படப்பிடிப்பை மீண்டும் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் துக்ளக் தர்பார்
படத்தில் இருந்து அதிதி ராவ் திடீரென்று விலகி விட்டார். கொரோனா லாக்டவுன்
காரணமாக ஏற்பட்ட கால்ஷீட் பிரச்னையால் அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.

ராஷி கண்ணா
இதையடுத்து அதிதி ராவுக்கு பதிலாக, விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ராஷி கண்ணா, விஜய் சேதுபதியுடன் சங்கத் தமிழன் படத்தில் ஏற்கனவே நடித்துள்ளார். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா, தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா படங்களில் நடித்துள்ளார். இப்போது அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார்.

மார்வாரி கேரக்டர்
அதிதி ராவ் மாற்றப்பட்டது பற்றி இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் கூறும்போது, கால்ஷீட்டை சரி செய்து பார்த்தோம். அதிதி ராவுக்கு வேறு படங்களின் கமிட்மென்ட் இருந்ததால், அவர் நடிக்க முடியவில்லை. அடுத்த சாய்ஸாக எங்களுக்குத் தெரிந்தது ராஷி கண்ணா. மார்வாரி பெண் கேரக்டருக்குப் பொருத்தமாக இருந்தார்.
Recommended Video

முடித்து விடுவோம்
அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டோம். ஷூட்டிங்கில் அவர் கலந்துகொண்டார். பாடல் காட்சியை படமாக்கியுள்ளோம். 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. டிசம்பர் முதல் வாரத்தில் ஷூட்டிங்கை முடித்துவிடுவோம்' என்றார். இதில் பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்பட பலர் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











