Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ராஷி கன்னாவுக்கு அடித்த ராஜயோகம்.. அஜய் தேவ்கன் நடிக்கும் புதிய வெப்சீரிஸில் இவர் தான் ஹீரோயினாம்!
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் முதன்முறையாக வெப்சீரிஸில் அடியெடுத்து வைக்க உள்ளார்.
அந்த வெப்சீரிஸில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷி கன்னா நடிக்கப் போவது உறுதி ஆகி உள்ளது.
கோவிட் -19 முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜனனி
தி ஃபேமிலி மேன் 2 இயக்குநர்களின் வெப்சீரிஸ் மூலம் டிஜிட்டல் ஸ்பேஸில் அறிமுகமாகவுள்ள ராஷி கன்னாவுக்கு அடுத்த அதிர்ஷ்டமாக இந்த பெரிய வாய்ப்பு அமைந்துள்ளது.

வெப்சீரிஸில் அஜய் தேவ்கன்
ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் மைதான் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் முதன்முறையாக வெப்சீரிஸில் காலடி எடுத்து வைக்க உள்ளார். அந்த வெப்சீரிஸுக்கு ருத்ரா தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ் என்கிற டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது.

அறிமுகமே இந்தியில் தான்
மெட்ராஸ் கஃபே எனும் பாலிவுட் படத்தில் தான் ராஷி கன்னா அறிமுகமானார். தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்த ராஷி கன்னா விஷாலின் அயோக்யா, விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அரண்மனை 3
மேலும், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3ம் பாகத்திலும் நடிகை ராஷி கன்னா ஹீரோயினாக நடித்து வருகிறார். சூர்யாவின் அருவா படம் டிராப் ஆனாலும் அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என செம பிசியாகி வருகிறார் ராஷி கன்னா.

தி ஃபேமிலி மேன் இயக்குநர்களுடன்
காஜல் அகர்வால், தமன்னா, கயல் ஆனந்தி, சமந்தா என தென்னிந்திய நடிகைகள் வரிசையாக வெப்சீரிஸில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், நானும் வெப்சீரிஸுக்கு வருகிறேன் என தி ஃபேமிலி மேன் இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் புதிய வெப்சீரிஸில் ராஷி கன்னா நடித்து வருகிறார்.

அடித்தது ராஜயோகம்
இந்நிலையில், ராஷி கன்னாவுக்கு அடுத்த வெப்சீரிஸ் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அதுவும் நடிகர் அஜய் தேவ்கனின் ருத்ரா வெப்சீரிஸில் லீடு ஹீரோயினாக நடிக்கும் ராஜயோகம் அடித்துள்ளது. இதனால், உச்சகட்ட சந்தோஷத்தில் உள்ளார் ராஷி கன்னா.

லூதர் ரீமேக்
பிபிசி தயாரிப்பில் வெளியாகி உலகளவில் ஹிட் அடித்த லூதர் வெப்சீரிஸின் ரீமேக் தான் இந்த ருத்ரா. பிரபல ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா நடித்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனும் ரூத் வில்சன் நடித்த கதாபாத்திரத்தில் ராஷி கன்னாவும் நடிக்க உள்ளனர். அடுத்த மாதம் ஜூலை 21ம் தேதி இதன் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்திக்கு கிடைக்காத வாய்ப்பு
அஜய் தேவ்கனின் மைதான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்தது. ஆனால், கடைசியில் கீர்த்தி சுரேஷை விட்டு அந்த வாய்ப்பு கை நழுவி பிரியாமணிக்கு சென்று விட்டது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு கிடைக்காத அஜய் தேவ்கனுடன் நடிக்கும் வாய்ப்பு தற்போது ராஷி கன்னாவுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.