இவங்கதான் அவங்களா..? வில்லேஜ் லுக்கில் மீண்டும் அந்த பிரபல நடிகை.. இதுதான் 'அரண்மனை 3' கெட்டப்!
சென்னை: பாவாடை தாவணியில் பிரபல நடிகை மீண்டும் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகை ராஷி கண்ணா.
இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா, அனுராக் காஷ்யப் உள்பட பலர் நடித்திருந்தனர்.

தெலுங்கு சினிமா
அடுத்து ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படங்களில் நடித்தார். இந்தியில் ஜான் ஆப்ரஹாமின் மெட்ராஸ் கபே என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ராஷி, அங்கிருந்து தெலுங்கு சினிமாவுக்கு வந்தார்.

முன்னணி ஹீரோ
மும்பை ஹீரோயின்களின் சொர்க்கமாக இருக்கும் ஐதராபாத், ராஷி கண்ணாவையும் கொண்டாடியது. அங்கு முன்னணி ஹீரோ படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக, விஜய தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

துக்ளக் தர்பார்
இப்போது, தமிழில், சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்திலும் இணைந்தார். லாக்டவுனில் தமிழ்க் கற்று வந்த நடிகை ராஷி கண்ணாவுக்கு இப்போது கொஞ்சம் பேசத் தெரியுமாம். இன்ஸ்டாவில் கிளாமர் ஸ்டில்களை பதிவிடும் நடிகை ராஷி கண்ணா, கடந்த சில நாட்களுக்கு முன், பாவாடை, தாவணியில் ஸ்டில்களை வெளியிட்டு இருந்தார்.

மீண்டும் வில்லேஜ் லுக்
பச்சை சட்டை, சிவப்பு நிற தாவணியில் அவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் வைரலாகின. தொடர்ந்து சில போட்டோஷூட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்த நடிகை ராஷி கண்ணா, இப்போது மீண்டும் வில்லேஜ் லுக் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பாவாடை தாவணி
பொள்ளாச்சியில் நடந்து வரும் அரண்மனை 3 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அந்த போட்டோவை வெளியிட்டுள்ளார். பாவாடை தாவணியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு, ஹலோ நாம் மீண்டும் சந்திப்போம் என்று கூறியுள்ளார்.

முழுமை பெறாது
அந்த புகைப்படங்களைக் கண்டு, அரண்மனை முதல் பாகத்தில் ஹன்சிகா கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார். இதில் நீங்கள் அந்த கேரக்டரில் நடிக்கிறீர்களா? என ரசிகர்கள் கேட்டுள்ளனர். சிலர் அவர் அழகை புகழ்ந்துள்ளனர். நீங்கள் இல்லாமல் அழகு என்ற வார்த்தை முழுமை பெறாது என பலர் கூறியுள்ளனர்.
Recommended Video

வேற லெவல்ல
இன்னொரு நெட்டிசன், நீங்க இன்னும் சப்பியா இருந்தா, வேற லெவல்ல இருப்பீங்க? என்று அட்வைஸ் செய்துள்ளனர். இந்த கிராமத்து லுக்கில் உங்க லெவல் அம்சமா மாறிப்போச்சு என சிலர் கூறியுள்ளனர். சில நெட்டிசன்ஸ், அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











