மாஸ் இயக்குனரின் படத்தில்…விக்ரமுடன் ஜோடி சேரும் ராசி கண்ணா!

சென்னை : நடிகை ராசி கண்ணாவுக்கு தமிழில் அடுத்தடுத்து பெரிய படங்கள் வெளியாக வரிசைகட்டி நின்று கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது விக்ரமுடன் புதிய திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அசத்தி இருந்த இவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியதையொட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த அப்டேட் வெளியாகி உள்ளது.

இவ்வாறு தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராசி கண்ணா நடிகர் விக்ரமுடன் முதல்முறையாக இணையும் இந்த திரைப்படத்தை பிரபல அதிரடி இயக்குனர் இயக்குகிறார்.

கொள்ளைகொள்ளும் அழகு

கொள்ளைகொள்ளும் அழகு

கோலிவுட்டில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் மிகப் பிரபலமாக இருந்து வரும் ராசி கண்ணா தனது அலட்டிக்கொள்ளாத நடிப்பின் மூலமும் கொள்ளைகொள்ளும் அழகின் மூலமும் பல கோடி ரசிகர்களை கொண்டுள்ளார்.

மிக தாமதமாகவே

மிக தாமதமாகவே

இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள இவர் தமிழுக்கு மிக தாமதமாகவே அறிமுகப்படுத்தப்பட்டார்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

ஜெயம் ரவி, விஷால், விஜய் தேவரகொண்டா, அதர்வா, விஜய் சேதுபதி என தமிழில் பிரபலமான நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ராசி கண்ணா இப்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 3, சைத்தான் கே பச்சா, துக்ளக் தர்பார் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வர ஓரிரு நாட்களுக்கு முன்பு இவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இப்பொழுது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கதாநாயகியாக ஒப்பந்தம்

கதாநாயகியாக ஒப்பந்தம்

தமிழ் சினிமாவில் அதிரடி இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் ஹரி இப்பொழுது சூர்யா நடித்து வரும் அருவா திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அதைப் பற்றி அரசல்புரசலாக சில செய்திகள் வலம் வந்த போதிலும், சாமி மற்றும் சாமி பாகம் இரண்டு உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் விக்ரமுடன் இணைந்து மற்றுமொரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை இயக்க இருக்க அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ராசி கண்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

எதிர் பார்க்கலாம்

எதிர் பார்க்கலாம்

ஏற்கனவே ஹரி - விக்ரம் கூட்டணியில் உருவான திரைப்படங்கள் மெகா ஹிட் அடைந்து வசூல் மழையை பொழிய வைத்த நிலையில் மூன்றாவது முறையாக இவர்கள் இணையும் இந்த புதிய திரைப்படத்தில் ராசி கண்ணா இணைந்திருக்க ஆக்சன், காதல் ரொமான்டிக், கவர்ச்சி என அனைத்தும் கலந்த மற்றும் ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்தை எதிர் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X