புதையலை தேடும் ராட்சசி பட டைரக்டர்... பட பெயரை கேட்டா ஷாக் ஆகிடுவிங்க
சென்னை : முதல் படத்திலேயே ஜோதிகாவை வைத்து ராட்சசி படத்தை இயக்கிய டைரக்டர் கவுதம்ராஜ், தற்போது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கி உள்ளார். சாகசங்கள் நிறைந்த காமெடிமாக இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தானே கதையை எழுதி உள்ள கவுதம்ராஜ், இந்த படத்திற்கு, வீரப்பனின் கஜானா எனவும் பெயரிட்டுள்ளார்.
இந்த படத்தில் ராஜேஷ், தேவா, பூஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர். பிரபதீஸ் ஷாம்ஸ் உடன் இணைந்து கவுதம்ராஜும் படத்திற்கான கதையை எழுதி உள்ளார்.

புதையலை தேடும் கதை
இந்த படம் பற்றி கவுதம்ராஜ் கூறுகையில், இந்த படம் முழுவதும் காட்டுப்பகுதியில் எடுக்கப்பட உள்ளது. தொலைந்து போன புதையலை தேடி வருபவர்களை பற்றிய கதை இது. பொதுவாக, காடுகளில் புதையல் நிறைந்திருக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது. மர்மங்கள் அதை சூழ்ந்திருக்கும் எனவும் கூறப்படுகிறது. காட்டு புதையலை மையமாகக் கொண்ட இந்த கதையில், காட்டில் ஒளிந்திருக்கும் மர்மங்களின் உண்மைதன்மையை ஆராய்வது தான் படத்தின் கதை என்றார்.

காட்டை ஆராய போகிறோம்
மேலும் அவர் கூறுகையில், வீரப்பனின் கோணத்தில் காட்டை பார்க்கும் படம் இது. காட்டின் முக்கியத்துவத்தை நகைச்சுவையான வழியில் சொல்வதாகவும் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது. ராஜேஷ், தேவா, பூஜா ஆகியோரிடையே முக்கோண காதல் உள்ளது. அவர்கள் ஏதோ ஒன்றை தேடி காட்டிற்கு வருகின்றனர். யோகிபாபு புதையலை தேடுபவராக நடித்துள்ளார். ராஜேந்திரன், தொலைந்து போன தனது குரங்கை தேடி காட்டிற்கு வந்திருப்பார்.

ஏற்கனவே சூட்டிங் ஆரம்பிச்சாச்சு
இந்த படத்தின் சூட்டிங் தற்போது குற்றாலத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று - நான்கு மாதங்களுக்கு முன்பே சூட்டிங்கை துவங்கி விட்டோம். முதலில் நாகர்கோவில், தென்காசி, களக்காடு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். சிஜி வேலைகள் நிறைய உள்ளன. நிறைய விலங்குகளை காட்ட வேண்டி உள்ளது என்றார்.
Recommended Video

ஜோதிகாவுடன் மற்றொரு படம்
அத்துடன், ஜோதிகாவை வைத்து மற்றொரு படத்தை இயக்கவும் கவுதம் திட்டமிட்டுள்ளாராம். ஆனால் அதற்கு முன் ஹீரோவை மையப்படுத்திய மற்றொரு படத்தை இயக்குவற்காக கதை தயார் செய்து வருகிறேன். கதை முழுவதுமாக தயார் செய்த பிறகு அந்த படமும், அதைத் தொடர்ந்து ஜோதிகாவை வைத்து எடுக்க போகும் படத்தை பற்றியும் அறிவிக்க உள்ளதாக கூறுகிறார் கவுதம்ராஜ்.


Click it and Unblock the Notifications











