#Raatchasi: வேற லெவல் பெர்பாமன்ஸ்.. ஜோ நடிப்பு டெரிபிக்.. ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த ‘ராட்சசி’!
ஜோதிகாவின் ராட்சசி பட டிவிட்டர் விமர்சனம் தரப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடித்துள்ள ராட்சசி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல விதமான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் 'ராட்சசி'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தில், ஜோதிகா அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார்.

இதில், பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மிடுக்கான ஆசிரியராக ஜோதிகா நடித்துள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகியது.
இந்நிலையில் இப்படம் இன்று ரிலீசாகியுள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள், 'மாணவர்களிடம் நட்பாக பழகும் ராட்சசியாக' ஜோதிகா நடிப்பில் மிரட்டி இருப்பதாக சமூகவலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரிராஜா, சுட்டுப் பிடிக்க உத்தரவு போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, ராட்சசி படம் தொடர்பாக வெளியிட்டுள்ள டிவீட்டில், 'நம் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டு வர அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ராட்சசி. ஜோதிகா மேடத்தின் நடிப்பை பார்த்து பிரமித்து விட்டேன். குறிப்பாக அவரது தந்தையின் இறுதிச் சடங்கு காட்சியில் இயக்குநர், தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தயாரிப்பாளருமான சஞ்சய் பாரதி வெளியிட்டுள்ள டிவீட்டில், 'ராட்சசி.. அருமையான படம். இப்படிப்பட்ட கதைகளைத் தேர்வு செய்வததற்காக தயாரிப்பாளர் பிரபுவுக்கும், ஜோதிகா மேடத்துக்கும் என் பாராட்டுக்கள். ஜோதிகா மேடம் நடிப்பு பயங்கரம். வேற லெவல் பெர்பாமன்ஸ். படம் மாபெரும் வெற்றி பெற இயக்குநருக்கும் படக்குழுவுக்கும் என் வாழ்த்துக்கள்' எனப் பாராட்டியுள்ளார்.
ராட்சசி படம் பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது என ரத்தினச் சுருக்கமாக தன் விமர்சனத்தை முடித்துள்ளார் இந்த ரசிகர். இவரைப் போலவே ஜோதிகாவின் திரையுலக வாழ்க்கையில் நிச்சயம் இப்படம் மிகச் சிறந்த படமாக இருக்கும் என மற்ற ரசிகர்களும் விமர்சித்துள்ளனர்.
மற்ற ஆசிரியர்கள் பற்றிய படங்களில் இருந்து ராட்சசி வேறுபட்டுள்ளது. படத்தின் வசனங்கள் அருமையாக உள்ளது' என இந்த ரசிகர் பாராட்டியுள்ளார். ஆனால், இவரது விமர்சனத்தைப் படித்த இந்த நெட்டிசனோ, 'சாட்டை படத்தில் சமுத்திரக்கனி போல இப்படத்தில் ஜோதிகா நடித்திருக்கிறாரா?' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











