இராவண கோட்டம் ஷூட்டிங் முதல் நாளே சண்டை போட்ட சாந்தனு, ஆனந்தி
Recommended Video
சென்னை: இராவண கோட்டம் படத்தின் முதல் நாளே சாந்தனுவும், கயல் ஆனந்தியும் சண்டை போட்டுள்ளனர்.
விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடித்து வரும் படம் இராவண கோட்டம். முதல்முறையாக சாந்தனு, ஆனந்தி ஜோடி சேர்ந்துள்ளனர்.
படப்பிடிப்பை ஒரு பாடலுடன் துவங்கியுள்ளனர். அப்பொழுது தான் சாந்தனு, ஆனந்தி இடையே சண்டை வந்துள்ளது.

பாடல்
சண்டை என்றால் நிஜ சண்டை இல்லை. பாட்டுக்காக அவர்கள் சண்டை போட்டுள்ளனர். இயக்குநர் சொல்படி இருவரும் சமத்தாக சண்டை போட்டு நடித்துள்ளனர். அந்த பாடலில் நடித்தது புது அனுபவமாக இருந்ததாக ஆனந்தி தெரிவித்துள்ளார்.

சாந்தனு
சாந்தனு செமயாக நடிக்கிறார். அவர் டான்ஸ் ஆடுவதை பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் டான்ஸ் வேற லெவல். இந்த படத்தில் அவர் வித்தியாசமான லுக்கில் வருகிறார். இதுவரை அவரை அப்படி நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்கிறார் ஆனந்தி.

ஆனந்தி
நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் என்னை தேடி வருகின்றன. கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள படத்திலும் எனக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்று ஆனந்தி தெரிவித்துள்ளார்.

இயக்குநர்
மதயானை கூட்டம் படத்தை கொடுத்த விக்ரம் சுகுமாறன் 6 ஆண்டுகள் கழித்து இராவண கோட்டம் படத்தை இயக்கி வருகிறார். அதனாலேயே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











