Raavana Kottam Trailer - கீழத்தெருதான் கெத்துங்றத காமி - வெளியானது இராவண கோட்டம் ட்ரெய்லர்

சென்னை: Raavana Kottam Trailer விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இராவண கோட்டம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விக்ரம் சுகுமாறன். வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரான இவர் ஆடுகளம் படத்துக்கு கள ஆய்வு செய்து, பல வேலைகளை செய்தவர். அதுமட்டுமின்றி மதயானைக்கூட்டம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். அந்தப் படத்தில் கதிர், ஓவியா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Raavana Kottam Trailer is out now

ரசிகர்களின் கவனம் ஈர்த்த மதயானைக்கூட்டம்

மதயானைக்கூட்டம் படமானது கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடக்கும் மொய் விருந்து பற்றியும், உறவுகள் பற்றியும், அதற்குள் எழும் சிக்கல்கள் பற்றியும் படு ராவாக படத்தை உருவாக்கியிருப்பார் விக்ரம் சுகுமாறன். வசூல் ரீதியாக அந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அதேசமயம் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை பேசுவதாக அந்தப் படத்தின் மீது சிலர் விமர்சனம் வைத்தனர். ஆனால் அது சாதிய படமில்லை வாழ்வியல் படம்தான் என ஒரு தரப்பினர் கூறினர். படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் அட்டகாசமாக அமைந்திருக்கும். உதாரணமாக கதிரை கலையரசன் தனது வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு வரும்போதும்; அப்போது தனது உறவினர்களை ஜாடை மாடையாக பேசும் காட்சி இன்றுவரை பலரது ஃபேவரைட். அந்தக் காட்சியை அவ்வளவும் நேட்டிவிட்டியாக படமாக்கியிருப்பார் விக்ரம் சுகுமாறன்.

Raavana Kottam Trailer is out now

சாந்தனு நடிப்பில் உருவாகும் இராவண கோட்டம்

மதயானைக்கூட்டத்திற்கு பிறகு படம் ஏதும் இயக்காமல் இருந்த விக்ரம் சுகுமாறன் சாந்தனுவை வைத்து இராவண கோட்டம் படத்தை ஆரம்பித்தார். இதில் கயல் ஆனந்தி, பிரபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படத்தின் ஷூட்டிங் இப்போது முடியும் தருவாயில் இருக்கிறது. மதயானைக்கூட்டம் கொடுத்த இயக்குநரின் படம் என்பதால் இப்படத்தின் மீது சினிமா ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுமட்டுமின்றி பெரும் திருப்புமுனைக்காக காத்திருக்கும் சாந்தனுவுக்கு இந்தப் படம் ஹிட் படமாக அமையும் எனவும் கருதப்படுகிறது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் துபாயில் நடந்தது. படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

Raavana Kottam Trailer is out now

கவனம் ஈர்க்கும் இராவண கோட்டம் ட்ரெய்லர்

இந்நிலையில் இராவண கோட்டம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. கருவேல மரத்தை வைத்து ஆரம்பிக்கும் ட்ரெய்லர் போகப்போக ஊருக்குள் நடக்கும் கபடி போட்டியையும், சாதியை வைத்து ஊரை இரண்டாக பிரிக்கும் சதிகளையும் பேசும்படி இருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பின்னணி இசை அபாரமாக இருப்பதாக கூறுகின்றனர். அதேபோல் விக்ரம் சுகுமாறனின் மேக்கிங்கும், லொகேஷன் தேர்வும் வழக்கம் போல் பிரமிப்பூட்டுவதாகவும், நிச்சயம் இந்தப் படம் தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக அமையும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இராவண கோட்டம் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X