Raavana Kottam: இராவண கோட்டம் படத்தை பாராட்டிய திருமாவளவன்... படக்குழுவினர் நெகிழ்ச்சி

சென்னை: சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள இராவண கோட்டம் திரைப்படம் நேற்று (மே 12) திரையரங்குகளில் வெளியானது.
விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்துள்ளார்.
இராவண கோட்டம் வெளியாகும் முன்பே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், விசிக தலைவர் தொல் திருமாவளவன் இராவண கோட்டம் படத்தை பாராட்டியுள்ளார்.

Raavana Kottam: VCK leader Thol Thirumavalavan praised Raavana Kottam film

இராவண கோட்டம் படத்தை பாராட்டிய திருமாவளவன்:சாந்தனு ஹீரோவாக நடித்துள்ள இராவண கோட்டம் திரைப்படம் நேற்று முதல் திரையரங்கில் வெளியானது. விக்ரம் சுகுமாரன் இயக்கிய இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கைகள் முன் வைத்திருந்தன. இந்தப் படம் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களை காயப்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டது.

இதனையடுத்து இராவண கோட்டம் படத்தின் தயாரிப்பளர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், மண் சார்ந்த கதையை, மனிதத்தை அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் இராவண கோட்டம் படத்தை எடுத்துள்ளோம். விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடித்துள்ள இராவண கோட்டம், முழுக்க முழுக்க கற்பனையில் உருவானதாகும். இதில் இனம், மொழி சார்ந்து யாரையும் காயப்படுத்தும் காட்சிகள் இடம்பெறவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இராவண கோட்டம் படத்தை விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இந்த சிறப்பு திரையிடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமாவளவன், இராவண கோட்டம் படத்தை பார்த்துவிட்டு, இயக்குநர் விக்ரம் சுகுமாரன், நடிகர் சாந்தனு ஆகியோரை பாராட்டியுள்ளார். இந்த வீடியோவை இயக்குநர் விக்ரம் சுகுமாறன் தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

அதில், "அன்பு அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் பாராட்டுக்களுடன் இராவண கோட்டம்" திரைப்படம் என கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து நடிகர் சாந்தனுவும் தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 1957ம் ஆண்டு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், சாந்தனுவுடன் பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Raavana Kottam: VCK leader Thol Thirumavalavan praised Raavana Kottam film

ராமநாதபுரம் மாவட்டம் ஏனாதியை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. அங்கு மேல தெரு, கீழ தெரு, இரண்டு பகுதி மக்களும் ஒன்றுக்குள் ஒன்றாக பழகி வருகின்றனர். இருதரப்பு தலைவர்களான பிரபுவும் இளவரசனும் நட்புக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர். அப்போது அரசியல் ஆதாயத்திற்காக ஆளும் கட்சி இவர்கள் இருவருக்கும் இடையே கலவரத்தை மூட்டி விட சாந்தனு, கயல் ஆனந்தியின் காதலை கையில் எடுக்கிறது‌.

அதேநேரம் தண்ணீர் பஞ்சத்திற்கு மூல காரணமான கருவேல மரங்களை கண்டறிந்து அதனை அழிக்கும் வேலையில் இறங்கிய பிரபு, இளவரசன் கொலை செய்யப்படுகின்றனர். இதனால் இந்த இரண்டு பகுதி மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தால் என்ன நடந்தது, இறுதியாக கிராம மக்களிடம் அமைதி திரும்பியதா என்பது தான் இராவண கோட்டம் படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X