Dhanush Net Worth: நடிகர் தனுஷின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ!

சென்னை: நடிகர் தனுஷ் 1984ஆம் ஆண்டு ஜூலை 28ந் தேதி பிறந்தார். இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக தனுஷ் தான் இயக்கி நடித்த 50வது படமான ராயன் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நாளில் ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்நாளில் அவரின் சொத்துக்குறித்த தகவலை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்காக அந்த செய்தியில் அவரின் சொத்து மற்றும் சம்பளத்தை பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஃபிலிம் பேர் விருகள், தேசிய விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ள தனுஷ், 'துள்ளுவதோ இளமை' படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்தார். அண்ணன் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்கள் இவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்தில் இவர் நடித்த போது இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று கேலி கிண்டல் செய்தவர்களுக்கு தனது நடிப்பின் மூலம் பதில் அடி கொடுத்தார்.

Raayan Dhanush Net Worth

நடிகர் தனுஷ்: சினிமாவில் நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரஜினியின் மருமகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் பயணித்தாலும், அதை தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல், தனக்கு ஏற்ற கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவரின் திரைவாழ்க்கையும், நடிப்பையும் வியந்து பார்க்க வைத்த பெருமை வெற்றிமாறனையே சேரும். இவர் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் இவருக்கு பல விருதுகளை பெற்றுத்தந்ததோடு இவரை ஒரு மாஸ் ஹீரோவாக அடையாளப்படுத்தியது.

50வது படம் ராயன்: தற்போது தனுஷ் கோலிவுட், டோலிவுட், பாலிவுட்,ஹாலிவுட் வரை பிரகாசித்து வருகிறார். 2022ம் ஆண்டு ஹாலிவுட்டில் இவர் தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளை கொண்ட தனுஷ், தனது 50வது படமான ராயன் படத்தை எழுதி, இயக்கி நடித்துள்ளார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

சொத்து மதிப்பு: இந்நிலையில், தனுஷ் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். தி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த தனுஷ் தற்போது போயஸ் கார்டனில் பிரம்மாண்டமான பங்களா ஒன்றை கட்டி உள்ளார். போயஸ் கார்டனில் வீடு கட்ட வேண்டும் என்பது என் கனவு அது தற்போது நிறைவேறி இருப்பதாக ராயன் இசைவெளியீட்டு விழாவில் பேசி இருந்தார். அந்த பங்களாவின் மதிப்பு சுமார் 25 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.

கார் பிரியர்: கார் பிரியரான தனுஷ், ஜாக்குவார் எக்ஸ்.ஈ, செடான், ஆடி ஏ8, ஃபோர்ட் முஸ்தாங் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளாராம். அது மட்டுமன்றி இவர் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளார் அதன் மூலமாகவும் கணிசமான வருமானம் வந்து கொண்டு இருக்கிறது. தனுஷ் ஒரு படத்திற்கு 40 முதல் 50 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தம் தனுஷின் சொத்து மதிப்பு ரூ.160 கோடியை தாண்டலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X