எதே ராயன், கல்கி பட ரிலீஸ் தள்ளிப் போகுதா?.. அப்போ இந்தியன் 2வுக்கு மறுபடியும் ஆப்பு கன்ஃபார்மா?

சென்னை: இந்த ஆண்டு இதுவரை ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் பெரிய படங்கள் என்று பார்த்தால் அரண்மனை4 படம் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது. ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், ஆர்ஜே பாலாஜி, அசோக் செல்வன், கவின், மணிகண்டன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை.

பல பெரிய படங்கள் முழுதாக தயார் நிலையில் உள்ள போதும் தேர்தலை காரணம் காட்டி ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. தேர்தல் முடிந்தும் இன்னமும் பல படங்கள் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

Raayan and Kalki plans to skips June Release buzz trending

அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள படங்கள் முழுமையாக முடிக்க வேண்டும் என்கிற சூழல் மற்றும் எந்த ஒரு பெரிய படங்களுடன் போட்டி ரிலீசாக வந்துவிடக்கூடாது என்கிற அச்சம் காரணமாக தொடர்ந்து ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பதாக கூறுகின்றனர்.

தனுஷ் படம் தள்ளி போகிறதா?: தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் ஜூன் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த படத்தின் இரண்டாவது சிங்கிளான வாட்டர் பாக்கெட் பாடலும் வெளியானது. ராயன் படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் பெரிதாக ரசிகர்களை கவராத நிலையில் வியூஸ் ரொம்பவே அடி வாங்கியுள்ளது. இந்நிலையில், படத்தின் ரிலீசை ஜூலை மாதத்திற்கு தள்ளி போடலாம் என்கிற பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

மீண்டும் தள்ளிப் போகிறதா கல்கி?: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் ஏற்கனவே மூன்று ரிலீஸ் செய்திகளை தள்ளிவிட்ட நிலையில் அடுத்த மாதம் ஜூன் 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு முன்னிலையில், அந்தப் படத்தின் வெளியீட்டு தேதியையும் சில போஸ்ட் புரொடக்‌ஷன் பெண்டிங் உள்ள நிலையில், தள்ளி வைக்கும் முடிவுக்கு படக்குழு வந்திருப்பதாக கூறுகின்றனர்.

இந்தியன் 2வுக்கு சிக்கல்: ராயன் மற்றும் கல்கி படங்கள் ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போனால் ஜூன் மாதத்திலிருந்து ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போய் உள்ள இந்தியன் 2 படத்துக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே இந்தியன் 2 படத்துக்கு பெரிதாக ஹைப் இல்லாத நிலையில் சோலோ ரிலீசாக வந்தால்தான் படம் தப்பிக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X