Dhanush: அம்மாடியோவ்! ராயன் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கட்டியிருந்த வாட்ச் விலை இத்தனை லட்சங்களா?

சென்னை: தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது ராயன் படத்தின் இசை வெளியிட்டு விழா தொடர்பாகத்தான். மிகவும் பிரம்மாண்டமான முறையில் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. தற்போது இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தனுஷ் கட்டியிருந்த கைகடிகாரத்தின் விலை குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே இயக்கியுள்ளார். தனது 50வது படத்தை இயக்க மற்றொரு இயக்குநரை அணுகி அந்த இயக்குநருக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் எனும் நோக்கில், தானே கதை திரைக்கதை அமைத்தது மட்டும் இல்லாமல், தானே படத்தை இயக்கியும் உள்ளார். இந்த படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இதற்கான வேலைகளை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தீவிரமாக செய்து வருகின்றது. ராயன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.

Dhanush Raayan

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர் படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இது மட்டும் இல்லாமல் விழா மேடையில் தனுஷ் மற்றும் ரகுமான் இருவரும் அடங்காத அசுரன் பாடலை போட்டி போட்டு பாடி அமர்க்களப்படுத்தினர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

படத்தில், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி, வரலஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தில் எக்கச்சக்க ஸ்டார் நடிகர்கள் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டு உள்ளது.

Dhanush Raayan

இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசுகையில், " ஒன்றுமே தெரியாமல் இருந்த என்னை நடிகன் ஆக்கியது என்னுடைய அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன்தான். அவர்தான் என்னுடைய ஆசான், குரு எல்லாமே. எனக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்தது, சாப்பிட சொல்லி கொடுத்தது, வாழ்க்கையில் போராட சொல்லிக் கொடுத்தது எல்லாம் அவர்தான். கண்ணம்மா பேட்டையில் ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த என்னை இன்று போயஸ் கார்டனில் உட்கார வைத்திருப்பதற்கு காரணமும் என்னுடய அண்ணன் செல்வராகவன்தான்" என பேசினார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வழக்கம்போல் வேட்டி சட்டையில் வந்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். தற்போது தனுஷ் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்தபோது அவர் அணிந்து இருந்த வாட்ச்சின் விலை மற்றும் அதன் மாடல் குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Dhanush Raayan

தனுஷ் கட்டியிருந்த வாட்ச், எஃப்.பி.ஜெர்னி இன்வெனிட் எட் ஃபெக்ட் என்ற மாடல் ஆகும் இந்த மாடலில் தனுஷ் கட்டியிருந்ததைப் போலவும், இளஞ்சிவப்பு நிறத்தில் மற்றொரு மாடலையும் அந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 85 லட்சத்து 51 ஆயிரத்து 566-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தற்போது இது தொடர்பான செய்திகள் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X