Raayan Box Office: கர்ணன் முதல் நாள் வசூலை தட்டித் தூக்குமா ராயன்?.. முதல் நாள் வசூல் கணிப்பு இதோ!
சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள அவரது 50வது படமான ராயன் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. அதிகாலை 6 மணிக்கே அமெரிக்கா முதல், டோலிவுட் உள்ளிட்ட மற்ற இடங்களில் ராயன் படம் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
இன்டர்வெல் காட்சியின் போது தனுஷ் பெரிய சம்பவம் செய்திருக்கிறார் என்றும் ராயன் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என்றும் கூறுகின்றனர். வெற்றிமாறன் படம் பார்த்ததை போல ஒரு உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

ஆக்ஷன் காட்சிகளில் நடிகர் தனுஷ் அதிர வைத்துள்ளதாகவும், அனைத்து நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ஏற்று கச்சிதமாக நடித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ப்ரீ சேல் டிக்கெட் புக்கிங்: தனுஷின் ராயன் படத்தின் ப்ரீ சேல் டிக்கெட் புக்கிங் தாறுமாறாக உள்ளது. இந்த ஆண்டு 100 கோடி வசூல் ஈட்டிய அரண்மனை 4 மற்றும் மகாராஜா உள்ளிட்ட படங்கள் எல்லாம் முதல் நாளில் வெறும் 4 கோடி ரூபாய் தான் வசூல் ஈட்டின. கேப்டன் மில்லர் திரைப்படம் 9 கோடி வரை வசூல் ஈட்டியது. இந்நிலையில், ராயன் படத்தின் ப்ரீ சேல் டிக்கெட் வசூல் மட்டும் தமிழ்நாட்டில் 5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக கூறுகின்றனர். அதே போல உலகம் முழுவதும் 6 கோடி ரூபாய்க்கு ப்ரீ சேல் டிக்கெட் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராயன் வசூல் கணிப்பு: தனுஷ் நடிப்பில் வெளியான படங்களிலேயே கர்ணன் திரைப்படம் தான் முதல் நாளில் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறுகின்றனர். இந்நிலையில், ராயன் திரைப்படமும் முதல் நாளில் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து கர்ணன் படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்ஃபார்ம் ஹிட்: தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, வரலட்சுமி சரத்குமார், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல் பாதி ரிப்போர்ட்டுகளே படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களாக குவிந்துள்ள நிலையில், இரண்டாம் பாதியும் வெயிட்டாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











